கன்மலையிலிருந்து வருகிற என்றென்றும்-பிரசன்னமாயுள்ள தண்ணீர் 61-0723M இந்தக் காலை தேவனாகிய கர்த்தரின் பிரசன்னத்திற்காகவும், நமது ஆராதனைகளின் ஆரம்பத்திலேயே, கர்த்தருக்கு முன்பாக, அதாவது—அதாவது நாம் “கவனமாய்க் கேட்டு, பயபக்தியுள்ளவர்களாய்” இருக்கவேண்டும் என்னும் ஒரு செய்தியை நமக்களித்து, நம்மிடம் கூறும்படி ஒன்றைக் கொண்டிருந்ததற்காகவும், நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளதை அவர் செய்வார் என்று நான் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அவர் எப்பொழுதுமே தமது வார்த்தையை காத்துக்கொள்ளுகிறவராக இருக்கிறார். இந்தக் காலை நாம் உயிருடன், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில், கர்த்தரை மீண்டும் ஆராதிக்கவும், அவர் கூறுவதைக் கேட்கவும் ஒன்று கூடினதற்காக நாம் நன்றி யுள்ளவர்களாய் இருக்கிறோம், அந்தக் காரணங்களுக்காகவே, இந்த நோக்கத்திற்காகவே நாம் ஒன்று கூடுகிறோம். 2 இப்பொழுது, நான் கண்ட ஒரு குறிப்பிட்ட சொப்பனத்தின் விளைவாக, இன்றைக்கு, இன்று, எதிர்பாராதவிதமாக, நான் சகோதரன் நெவிலை ஒருவிதமாக முற்றுகையிட்டேன். அதாவது…நான் சொப்பனங்களில்…நான்…நம்பிக்கைக் கொண்டவன். தேவன் ஜனங்களுடன் சொப்பனங்களின் மூலம் தொடர்புகொள்கிறார் என்பதை நான் நம்புகிறேன். சென்ற இரவுக்கு முந்தின இரவு, நான் மிக வழக்கத்திற்கு மாறான ஒரு சொப்பனம் கண்டேன், அதாவது, அதில் நான் ஒரு மலைப்பாங்கான இடத்திற்கு, நிச்சயமாகவே மலைப்பாங்கான இடத்திற்கு, நான் என்னுடைய—என்னுடைய பகல் உணவை அருந்த அங்கிருந்த உணவு அருந்தும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அந்த இடத்தை நான் அடைந்தபோது, அவர்கள் இசை இசைத்துக் கொண்டிருந்ததை, ஒரு வாத்தியக் குழு நரம்பிசைக் கருவிகளைக் கொண்டு இசைத்துக்கொண்டு, அங்கு உணவு அருந்திருந்தி கொண்டிருந்தவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. அதைக் குறித்து ஏதோ ஒரு காரியம் எனக்குப் பிடிக்கவில்லை, எனவே நான் அதை கடந்து சென்றேன். அப்பொழுது மலையின்மேல் ஏறி வருகிற யாரோ ஒருவரை நான் சந்தித்தேன். மேலும் அநேகர் மலையின் மேலேறி இந்த உணவு அருந்தும் இடத்திற்கு வந்துகொண்டிருப்பதை, நான் கண்டேன். ஆனால் நான் அவர்களிடத்திலிருந்து ஒரு விதமாக விலகி வலது புறமாக, இல்லை, இடது புறமாக திரும்பினேன். 3 அப்பொழுது எப்படியோ, கீழேயுள்ள பள்ளத்தாக்கில், நான் அந்த கூடாரத்தைக் கண்டேன். அப்பொழுது யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாமை இன்ன—இன்ன தெருச்சந்தியில் சந்தியுங்கள். அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருக்கிறார். அவரிடம் இன்ன-மற்றும்-இன்னதைக் கூறுங்கள்” என்று சொல்லுகிற சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான் இந்த தெருச்சந்தியை அடைய விரைந்து சென்றேன். 4 அங்த நபர் மேலே வந்தபோது, அது தன்னுடைய பழுப்பு நிற சூட்டை அணிந்திருந்த சகோதரன் நெவிலாயிருந்தது, இந்தக் காலை அவர் அங்கே அமர்ந்து காணப்படுகிறதைப் போன்றே அப்படியே காணப்பட்டார். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் பட்டினத்தில் இருக்க நேர்ந்தால்,” என்று கூறி, “நீர் இங்கு வருவது ஒரு—ஒரு நல்ல காரியமாயிருக்கும், ஏனெனில் சகோதரன் ஹாங்க்…” என்றார். இப்பொழுது, எனக்குத் தெரிந்த ஒரே சகோதரன் ஹாங்க், சகோதரன் ஹென்றி கார்ல்ஸன்தான், நாங்கள் அவரை ஹாங்க் என்று அழைக்கிறோம். “நீங்கள் பட்டினத்தைச் சுற்றிலும் இருக்கப்போவதாயிருந்தால், அல்லது ஒரு சில நாட்கள் பட்டினத்தை சுற்றிலும் தங்கப்போவதாயிருந்தால், கூடாரத்திற்கு வருகை தராமலிருந்தால், அவர் அதை வித்தியாசமாக நினைக்கலாம்” என்றார். அப்பொழுது நான் உறக்கத்தினின்று விழித்துக் கொண்டேன். 5 மேலும், அதை, நான் ஒரு விதமாக வினோதமாக உணர்ந்தேன். இந்தக் காலை, சபைக்காக, அவர் விசேஷமான ஏதாகிலும் ஒன்றை வைத்துள்ளாரா என்று கேட்காமல் நான் வாரத்தின் அந்த நேரத்தில் குறுக்கிட விரும்பவில்லை. எனவே அவர் எப்பொழுதும்போல, தயவாயிருந்து, “வாருங்கள்” என்றார். எனவே, நாங்கள் வந்திருக்கிறோம். நேற்று பிற்பகல் காலதாமதமாக நான் அவரை தொலைபேசியில் அழைத்தேன், இந்தக் காலை, நீங்கள் யாருமே எதிர்பாராத விதத்தில், நான் வந்துள்ளேன். 6 இப்பொழுது சில காரியங்களைக் குறித்து, முதலாவது, நான் உங்களிடம் விவரிப்பது நலமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன். நான், அநேக ஜனங்களுக்கு மிகவும் ஒரு வினோதமாக, தோன்றுபவன். நான் எனக்கே கூட, வினோதமானவன். ஏனெனில், என்னால் கூடிய மட்டும், நான் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். அது நம்மை வினோதமானவர்களாக்குகிறது, பாருங்கள். நாம் சில காரியங்களை செய்துவிட்டு, அதன்பின்பு நாம்—நாம் உண்மையாகவே உட்கார்ந்து, “நான் ஏன் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்தேன்? நான் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்படி செய்தேன்?” என்று சில நேரங்களில் வியப்புறுகிறோம். அப்பொழுது நீங்கள் செய்திருக்கக் கூடாத காரியத்தை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் பொறுமையாயிருந்து, விசுவாசத்துடன், அதை சிந்தித்துப் பார்ப்பீர்களானால், அதைச் செய்ய தேவன் உங்களை வழிநடத்தியிருக்கிறார் என்றும், அது சரியாக கிரியை செய்கிறது என்றும் நீங்கள் கண்டுகொள்வீர்கள். புரிகிறதா? அநேக முறை நாம் அதைக் கண்டறிகிறோம். சகோதரன் நெவில், அநேக முறை அதை கண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். மேலும் தலைவர்களும் மற்றும் ஆவிக்குரிய தலைவர்களும் அதை தெளிவாக உணருகிறார்கள். 7 என் வாழ்க்கையில் சில நேரங்களில் இருந்து வந்துள்ள…வெளிப்படையாகக் கூறினால், நான் ஒரு பையனாயிருந்தது முதற்கொண்டு, ஜெபர்ஸன்வில்லில்—நான் வாழவேண்டும் என்னும் ஏவுதல் எனக்கு ஒருபோதும் இருந்ததேயில்லை. இங்கு நான் வாழ முயற்சிப்பது, தைலத்தில் உள்ள ஈயைப் போன்றே எப்போதும் இருந்து வருகிறது. முதலாவதாக, இதன் மோசமான சீதோஷ்ண நிலை எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. வேறொரு காரியம், இங்கு ஒரு ஆவியின் சோர்வு இருப்பது போன்று தென்படுகிறது. 8 நீங்கள் திரும்பிச் சென்று இங்கு எங்காவது ஆராய்ந்து பார்த்தால், வெள்ளத்தின் போது அது அழிக்கப்படாதிருந்தால், நான், முதலாவதாக ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தபோது, எனக்கு அந்த விளைவைக் குறித்த ஒரு கடிதம் கிடைத்தது, நான் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தேன். நானும் சகோதரன் ஜார்ஜ் டீ ஆர்க்கும்… 9 அப்பொழுது சகோதரன் கிரகாம் ஸ்னெல்லிங்கின் தாயாரும், நியூ ஆல்பனியில் பெட்ரோல் நிலையம் வைத்திருக்கும் சகோதரன் ஹாகின்ஸும், மற்றும் அநேக ஜனங்களும், இங்கே ஜெப அறைக்கு வெளியே என்னை சந்தித்தனர். நான் இங்கு தங்கினால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் ஆகாரத்தை மட்டுப்படுத்தி பணம் சேமித்து, ஒரு கூடாரத்தை இங்கு கட்டுவார்கள் என்றும், அப்பொழுது அவர்கள் ஆராதனைக்கென ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூட கூறினர். 10 அந்த வாலிபத்தாய் ஒரு குழந்தையை அவளுடைய கையிலேத்தில் கொண்டு, மற்ற குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, தன் குழந்தைகளின் ஆகாரத்தையும் மட்டுப்படுத்தி அவர்கள் ஆராதிப்பதற்கென ஒரு இடத்தைக் கட்ட, ஆயத்தமாயிருக்கிறாள் என்று கூறினதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாததாயிருந்தது. எனவே சகோதரன் ஜார்ஜும் நானும் ஒன்று கூடி தங்கி கூடாரத்தைக் கட்ட தீர்மானித்தோம். 11 அந்த கூடாரம் கட்டி முடிந்தப் பின்னர், அது எப்பொழுதுமே…இக்கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்த அன்று காலையில் எனக்கு ஒரு தரிசனம் உண்டானது, அது எழுதப்பட்டு, அங்குள்ள மூலைக்கல்லில் வைக்கப்பட்டுள்ளது, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “இது உன்னுடைய கூடாரம் அல்ல” என்றார். பார்த்தீர்களா? என் கூடாரம் எங்கேயென்று நான் கேட்டபோது, அவர் என்னை பிரகாசமுள்ள நீல வானத்தின் கீழ் நிறுத்தினார். அப்பொழுது அவர், “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என்றார். அதெல்லாம், உங்களுக்குத் தெரியும், அது புத்தகங்களிலும் கூட எழுதப்பட்டுள்ளது. 12 இந்தக் காரியங்கள் யாவும் ஒன்று சேர்ந்துள்ளன. ஒரு நாள் நான் இப்பொழுது சகோதரன் உட் தங்கியுள்ள வீட்டின் முற்றத்திலுள்ள புல்லை செதுக்கிக் கொண்டிருந்தபோது, என்னுடைய மாமியார் அந்த நேரத்தில் அங்கே தங்கியிருந்தார்கள்; நான் பின்னாலுள்ள, ஒரு சிறு பழைய கான்கிரீட் படியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தேன், நான் அந்த சிறு இடத்தை என் மாமியாருக்குக் கட்டித் தந்திருந்தேன். அச்சமயம் அவள் சபையின் வாயிற்காப்பாளரைப் போலிருந்து, கவனித்து வந்தார். அப்பொழுது எவரும் பேசக் கூடியது போன்ற மிகத் தெளிவான, ஒரு சத்தம் என்னிடத்தில், “நீ இங்கு தங்கியள்ள வரைக்கும், உன்னை நான் ஒருபோதும் ஆசிர்வதிக்கவே முடியாது. நீ இந்த இடத்திலிருந்தும், இந்த ஜனங்களிடத்திலிருந்தும் பிரிந்து செல்ல வேண்டும்” என்றுரைத்தது. பாருங்கள், நான், அது கிட்டத்தட்ட ஒரு வார காலமாக அல்லது அதற்கும் மேலாக என்னை சுக்குநூறாக்கியது. 13 எப்பொழுதும், எல்லா நேரத்திலும், ஏதோ ஒன்று என்னை, “போய் விடு, போய் விடு, மேற்குக்குப் போ, மேற்குக்குப் போய்கொண்டிரு,” என்று எச்சரித்து வந்துள்ளது. பாருங்கள், நான்…அது எப்பொழுதும் என்னை தொந்தரவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது. மேலும் ஒவ்வொரு முறையும் அது… 14 இப்பொழுது, நான் டூசானுக்கு செல்ல வேண்டுமென்று இந்த வாரம் என் மனதில் தீர்மானித்துக் கொண்டேன், அங்கு ஓரிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, இந்த குளிர்காலத்தில் தங்கப் போகின்றேன்; பிள்ளைகளையும் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பேன், அது செப்டம்பரில் தொடங்குகிறது. எனக்கு இடம் உள்ளது. எனக்கு ஒருவர் கொடுத்த இடம் கூட அங்குள்ளது. ஆனால் ஏதோ ஒன்று…மேலும்—மேலும் நான் இங்கிருந்து போய்விட்டால்… 15 நான் வேறொன்றைக் கூற விரும்புகிறேன். இங்குள்ள இந்த வீட்டை நாங்கள் கட்டுவதற்கு முன், இப்பொழுதுள்ள, அந்த போதகரின் வீட்டை, நான் அங்கே கட்ட விரும்பவில்லை. என் மனைவியின் தாயார் வயது சென்றவர்கள். என் மனைவி அதைக் குறித்து அழத் தொடங்கினாள், அவள், “தாயார் வயோதிகமாயுள்ளதை அறிந்து, என்னால் அவளை இங்கு விட்டு விட்டுச் செல்ல முடியாது, அவள் கவனிக்கப்படாமலிருக்கலாம்” என்றாள். பாருங்கள், நான் அதை புரிந்து கொண்டேன். அதை புரிந்து கொள்கிறேன். அது அவளுடைய தாய், அவளுக்கு இருந்ததும், அல்லது அவளுக்கு எப்பொழுதும் இருக்கப் போகும் ஒரே தாய். எனவே, நான் புரிந்துகொண்டேன். எனவே நான்—நான் கர்த்தரிடம் ஜெபித்தேன், நான், “கர்த்தாவே, இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை,” என்றேன், மேலும் நான், “என்னை திருப்திபடுத்தும். நான் போக வேண்டும் என்று நீர் விரும்பும் எந்த இடத்திற்கும், நான் செல்வேன். ஆனால் நான் என் மனைவியை, வருத்தப்படுத்த விரும்பவில்லை, அவளை இங்கிருந்து, அவள் ஒருவரையும் அறியாத அந்நிய தேசத்துக்கு கொண்டு செல்ல விருப்பமில்லை. மேலும் நான் எல்லா நேரத்திலும், எப்படியும் சென்றுவிடுகிறேன். அவளுடன் இந்த இடத்தில் தங்கியிருக்க எனக்கு திருப்தியை அளியும்” என்றேன். 16 இப்பொழுது, அவளுடைய தாயார், அவள் மகிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, பாருங்கள், இப்பொழுது இங்கிருந்து போய்விடவேண்டுமெனும், தூண்டுதல் மறுபடியும் உண்டாகின்றது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 17 அதன்பின்னர் அன்றொரு நாள் இந்த போதகத்தை சகோதரர்கள் துவக்கியிருந்தபோது, இந்த பிரசங்க பீடத்தில் சென்ற முறை நான் இங்கே நின்றபோது, இந்த போதகம் நிலவி வரும் வரைக்கும் நான் ஊழியக் களத்தில் இருக்க மாட்டேன் என்று கூறினேன். ஆகையால், அந்த சகோதரர்கள் தயவாக அதை சரிபடுத்திவிட்டார்கள். அது தெளிவாகிவிட்டது. இருபத்து நான்கு மணி நேரத்துக்குள், அதெல்லாம் முடிந்துவிட்டது. 18 இப்பொழுது ஊழியத்திற்காக இடங்கள் மீண்டும் எனக்கு திறக்கப்பட்டுள்ளன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எந்தப் பக்கம் செல்வதென்று தெரியவில்லை. எனக்கு ஒரு தரிசனத்தை அருள கர்த்தரிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். நான் என்ன செய்யவேண்டுமென்று என்னிடம் கூறும்படி அவரைக் கேட்டுள்ளேன். ஆனால் அவரோ நான் அமைதியாய் அமர்ந்திருக்கும்படி செய்திருக்கிறார். 19 இப்பொழுது, சென்ற இரவு நான் எல்லா பிள்ளைகளையும், என் மனைவியையும் மற்ற யாவரையும், வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டப் பிறகு, நான் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டேன். நான் தேவனாகிய கர்த்தரிடத்தில், “நான் போகும் வழியில் நீர் என்னை ஆசிர்வதிப்பீரானால், நான் உம்மை சேவிப்பேன். ஆனால் நான் எங்கு செல்லவேண்டுமென்றும், எப்படி செல்ல வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் நீர் எனக்குக் காண்பிக்க வேண்டும்” என்றேன். ஆகையால், நான் தானே கர்த்தருக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டேன். என் ஊழியத்தையும், எல்லாவற்றையும், நான் அதைக் கர்த்தரிடம் ஒப்படைத்துவிட்டேன். மேலும் நான், “நீர் எங்கு வாசலைத் திறந்தாலும், நீர் என்ன செய்தாலும், அந்த வழியில் நான் செல்வேன். ஆனால் நீர் ஒரு வழியை ஏற்படுத்தும் வரைக்கும், நீர் அந்த வழியை ஏற்படுத்தும் வரைக்கும் நான் தொடர்ந்து இப்பொழுதுள்ளபடியே இருப்பேன்” என்றேன். நான் வஞ்சிக்கபடாதடிக்கு அவர் இதை தெளிவாக்கும்படி நான் அவரிடத்தில் கேட்டுக்கொண்டேன், ஏனென்றால் நாம் ஏதோ ஒன்று நிகழும் ஒரு தெருச்சந்தியில் நாம் சரியாக இருக்கிறோம் என்று நான் உண்மையாக நம்புகிறேன். 20 இந்தக் காலை இங்கே சகோதரன் நெவில் உரைத்த தீர்க்கதரிசனத்தை கேட்டேன், அல்லது அது—அது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தது என்று நான் அறிந்திருந்தை அவர் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். இப்பொழுது, எனவே, நான் உங்கள் அனைவருக்காகவும் நான் ஜெபித்துள்ளேன், நீங்கள் அனைவரும் எனக்காக ஜெபிக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும் என்றும், நான் என்ன செய்ய வேண்டும் என்றும், நான் தவறு ஒன்றும் செய்யாதபடிக்கு, சரியாக பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தவுமே ஜெபியுங்கள். 21 நீங்கள் பாருங்கள், அநேக சமயங்களில், ஜனங்கள் ஒரு தீர்க்கதரிசன வரத்தை, அதாவது தேவன், “உன்னை நான் இங்கிருந்து அங்கு கொண்டு செல்வேன், உன்னை இங்கே நிறுத்துவேன். இப்பொழுது நீ இங்கே செல்” என்று சொல்கிறார் என்று நினைக்கின்றனர். அவர் உங்களிடத்தில் எல்லா காரியங்களையும் சொல்லுகிறதில்லை. அவர் அப்படி கூறிவிட்டால், நீங்கள் எப்படிப்பட்ட ஜெயங்கொள்ளும் விசுவாசத்தை பெற்றிரூப்பீர்கள்? புரிகிறதா? பாருங்கள், நீங்கள், அவர் உங்களை மற்றவர்களைக் காட்டிலும் தனியே விட்டுவிடுகிறார். புரிகிறதா? நீங்கள் அனைவரும் என்னிடம் வந்து சில காரியங்களைக் கேட்கலாம், அதற்கு அவர் பதில் கூற ஒருபோதும் அவர் தவறினதில்லை. அது உண்மை. ஆம். ஆனால் எனக்கான காரியங்களை அவரிடம் கேட்க முடியும், அப்பொழுது அநேக சமயங்களில் நானே முன்சென்று அதில் நடக்கும்படி, அவர் என்னைத் தனியே விட்டு விடுகிறார், பாருங்கள். 22 நானாகவே இப்பொழுது எனக்கு தீர்க்க வேண்டிய காரியங்கள், மற்றும் நான் எடுக்க வேண்டிய முடிவுகள் என்னிடம் உள்ளன. அது மிகவும் முக்கியமான ஒன்றாகும், என்னிடம் பேசுகிறது அவர்தான் என்று நான் உறுதியாக நம்பும் வரையில் என்னால் அதை சரியாக செய்ய முடியாது. மேலும் நான்—நான்…அவர் எனக்குத் ஒரு தரிசனமும் தரமாட்டார். அவர் என்னைத் தனியே விட்டுவிடுகிறார். ஆகையால் இன்று காலை, நான் ஒரு அனாதையைப் போல் அமர்த்திருக்கிறேன். எந்த வழியாகத் திரும்புவது என்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் அதை கர்த்தரிடம் சமர்ப்பித்துள்ளேன். 23 அந்த சொப்பனத்தில், நான்—நான் அப்பொழுது இந்த விதமாக உணர்ந்தேன், அதாவது வேறு ஏதாவது பாதையில் நிகழும் வரைக்கும், நான் மீண்டும் இக்கூடாரத்துக்கு வந்து சகோதரன் நெவில்லுக்கு துணையாய் இருக்க வேண்டுமென்று உணரந்தேன். எனவே, நான் இங்கிருப்பேன். 24 சில நிமிடங்களுக்கு முன்பு நான் சகோதரன் நெவிலிடம், “சபை எவ்வாறு முன்னேறிக்கொண்டிருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நன்றாகவே” என்றார். 25 எனவே உங்கள் மத்தியில் ஆவிக்குரிய வரங்கள் இன்னும் மற்ற காரியங்கள், கிரியை செய்துகொண்டிருக்கின்றன என்று நான் கேள்விப்படுகிறேன், தீர்க்கதரிசன வரம், மற்றும்—மற்றும் அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தல், சற்று முன்பு அதை நாம் கேட்டோம். அந்த காரியங்கள் சபையை, பெரிதும் சீர்பொருந்தச் செய்கின்றன. 26 ஆனால் நான் நினைத்தேன், ஒருகால் நான் இன்றிரவு, சகோதரன் நெவில்…பரிசுத்த ஆவி வித்தியாசமான ஒன்றுக்கு நம்மை வழி நடத்தாமலிருந்தால், இன்றிரவு நான் விரும்புகிற ஒரு…நீங்கள் எல்லோருமே, இந்தக் காலை நீங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் முன்பு, உங்களுக்கு ஒரு கேள்வியை எழுதி, அதை இங்கு வையுங்கள், உங்கள் மனதில் உள்ள சில கேள்விகள், அதாவது சபை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அதன் மூலம் கண்டு கொள்ளலாம். ஜனங்களினுடைய இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டு கொள்ள போதகர்கள் கடைபிடிக்கும் வழிமுறை கிட்டத்தட்ட அதுவேயாகும். ஒரு கேள்வியோடிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், அதை எழுதி இங்கு வையுங்கள். அதை எழுத இன்று காலை உங்களிடம்—ஒரு காகிதத் துண்டு இல்லையென்றால், இன்றிரவு வரும்போது அதை நேரத்தோடு எழுதிக் கொடுத்து விடுங்கள். ஆகையால், அவைகளைப் பார்த்து, அவைகளின் பேரில், வேதப்பிரகாரமாக உங்களுக்கு பதிலுரைக்க எனக்குப் போதிய நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 27 அதன் பின்னர் கர்த்தருக்குச் சித்தமானால், அது கர்த்தருடைய சித்தமாயிருக்குமானால்; நான் அண்மையில் இங்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளேன், அது வெளிப்படுத்தின விஷேத்தில் உள்ள…ஏழு கடைசி முத்திரைகளைக் குறித்து நான் பேச விரும்புகிறேன் என்பதேயாகும். இப்பொழுது நாம்…இந்த ஆண்டு அந்த முத்திரைகளை நான் பேசி முடிக்க முடியாது, ஏனெனில் அந்த முத்திரைகளை பார்க்க வேண்டுமானால், அது வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரம் தொடங்கி, 19-ம் அதிகாரத்தினூடாக—அது முடிய உள்ளது. ஆனால் முதல் மூன்று அல்லது அவைகளின் நான்கு முத்திரைகளை, ஒரு இரவு ஒரு முத்திரை வீதம், முடிக்கலாமென்று நான் நினைக்கிறேன். 28 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில், சபை எங்கு மகிமையில் எடுத்துக்கொள்ளப் பட்டது என்பதை நாம் புரிந்துகொண்டு, அங்கு நிறுத்திக் கொண்டோமானால், அதன்பின்னர் அதன் மீதியுள்ள பாகம் யூதர்களோடு தொடர்பு கொள்ளுதல், சபையோடல்ல. அது யூத ஜாதியினருடன் ஈடுபடுகின்றது. எனவே நாம் சபை எடுத்துக் கொள்ளப்படுத்தலில் தொடங்கி…அந்த முத்திரைகளின் போதும், புறஜாதி சபை காலத்தின் போதும் என்ன நடக்கின்றது என்று இங்கு நாம் காண்கிறோம். சபை எடுக்கப்பட்ட பின்பு; அன்று முதல் அது இஸ்ரவேல் தேசத்தை காட்சிக்கு கொண்டு வந்து, தற் போதைய காலம் வரைக்கும் நீடித்து; மேசியா வரும் வரைக்கும் தொடர்கின்றது, அப்பொழுது அவர்கள் மேசியாவை எற்றுக் கொள்வார்கள். 29 இப்பொழுது இது உங்களுக்குப் புரிகிறதா? சபை எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தேவன் முதலில் சபையுடன், சபைக் காலங்களுடன் ஈடுபடுகின்றார். அதைக் குறித்து நாம் பார்த்தோம். சபை மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதன்பின்பு, பரிசுத்த ஆவியானவர் இஸ்ர வேலருடன், ஒரு தேசமாக ஈடுபடுகிறார். கலியாண விருந்து நடந்து கொண்டிருக்கும்போது, அதை இவ்வளவு தூரம் கொண்டு வருகிறார், அதன்பின்னர் முடிவு காலம் வரைக்கும் அவர்களைக் மீண்டும் கொண்டு வருகிறார். நேரம் வரும்போது, நான் என்னுடைய கரும் பலகையை வைத்து, அதில் வரைந்து அதைக் கற்றுக் கொடுப்பேன். பின்பு கர்த்தர் மணவாட்டியுடன் திரும்பி வருகிறார், இஸ்ரவேல் அவளைக் காண்கிறாள். மேலும், ஓ, அது என்ன ஒரு நேரமாக இருக்கும்! 30 இப்பொழுது, இதை நாம் சரியாக இணைக்கும் முன்பு, அது வேத பண்டிதர்களுக்கும், காலங்கள் தோறும் போதகர்களாயிருந்தவர்களுக்கும், இதைக் கேட்க வருகிறவர்களுக்கும் கிறிஸ்துவின் சபை ஜனங்களுக்கும், தடுமாறும் ஒரு பெரிய பாடமாக உள்ளது, அதுதான், தானியேலின் எழுபது வாரங்கள். நாம் பெற்றுள்ள…நாம் மணவாட்டியையும் இஸ்ரவேலையும் தானியேலின் எழுபது வாரங்களுடன் இணைக்காமல், வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல்ல முடியாது. ஒருகால் கர்த்தருக்குச் சித்தமானால், அவர் வருங்காலத்தில் என்னுடன் பேசுவாரானால், இந்த எழுபது வாரங்களின் பேரில் பேசுவாரானால்…அல்லது, எழுபது வாரங்கள் அல்ல, ஏழு கடைசி முத்திரைகளைக் குறித்து பேசலாம். அதன்பின்னர் அடுத்த ஞாயிறு, தானியேலின் எழுபது வாரங்கனைப் போதிக்க நான் முயற்சிப்பேன், கர்த்தருக்கு சித்தமானால், அதற்கு அடுத்த ஞாயிறு. அதன்பின்பு அவர் நம்மை வழி நடத்துவாரானால், அது மற்றவைகளின் பேரில் போதிக்கத் துவங்க அது ஆதாரங்களை திறப்பதாயிருக்கும். பாருங்கள், அதன்பிறகு நாம் பார்க்கலாம். 31 நானும் சகோதரன் நெவிலும் ஒருமித்து இதன் பேரில் பணிபுரிந்து, ஜனங்களுக்கு நன்மையாக எங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருப்போம். 32 இப்பொழுது, ஒவ்வொரு முறையும் திரும்பிச் செல்லும்போது, நாங்கள் வியாதியஸ்தருக்கும் ஜெபிக்கிறோம், அதை செய்ய நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி யுள்ளவர்களாய் இருப்போம். ஜனங்கள் சுகவீனமாயிருந்தால், அவர்களுக்காக ஜெபிக்க, நாங்கள் அநேகமாக அதை ஒவ்வொரு கூட்டத்திலும் செய்வோம். 33 நான் இனிமேல் பகுத்தறிவின் வரம் கிரியை செய்வதை விரும்பவில்லை. பாருங்கள், இப்பொழுது இதுதான் நடந்தது. நான் முயன்று வந்திருக்கிறேன். நான் தவறான செயல்களைப் புரிந்திருக்கிறேன் என்று நான் அறிவேன்; ஆனால் எப்பொழுதுமே தேவனுடன், நெருங்கி வாழ நான் முயன்று வந்துள்ளேன். அதனால் தான் எனக்கு இந்த தரிசனங்கள் உண்டாகி, அவைகள் எப்படி நிகழப்போகிறதென்று அறிவித்தன. சில சமயங்களில் ஜனங்கள் பொருட்களை தொலைத்து விடுவார்கள், நான் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணி, அது எங்கேயுள்ளது என்று அவரைக் கேட்கும்படி, என்னை வேண்டிக் கொள்வார்கள். ஈசாயின் கழுதைகள் காணாமற் போய், பையன்கள் தீர்க்கதரிசியிடம் சென்றபோல, அவை வீடு திரும்பியிருந்தன என்று அவன் கூறினதுபோல். எனவே அதுபோல, அது முற்றிலும் சரிதான். ஆனால் அது வளர்ந்துகொண்டே போகின்றது. எனவே அநேகர்…இது போன்ற இந்த இடத்தில் மாத்திரமல்ல; இது உலகம் முழுவதும் உள்ளது, பாருங்கள். எனவே அது கிடைக்கிறது, அது என்னை சின்னாபின்னமாக்கி, பின்னர் அது ஒரு இடத்திற்கு வரும் வரை எப்போதும் உங்களை எல்லா நேரத்திலும் விளிம்பில் வைத்திருக்கும்… 34 அதுதான், நான் மாமிசத்தில் தோன்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும், உபதேசத்தை அந்த சகோதரர்கள் தொடங்கக் காரணமாயிருந்தது. அது ஊழியத்தை தகர்த்தெறிந்து, கிறிஸ்துவுக்கு நிந்தையைக் கொண்டு வருமென்று நமக்குத் தெரியும். புரிகிறதா? ஆகவேதான் நான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை உண்டாக்கி, உடனே நிறுத்தும்படிக்கும், அது தேவனுடையதல்ல, அது பிசாசினுடையது என்று ஜனங்கள் அறிந்துகொள்ளும்படியும் செய்தேன். புரிகிறதா? அவர்கள் நல்ல ஜனங்கள். அது அவர்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள் என்பதைக் காண்பித்தது, ஏனென்றால், அவர்கள் வேதத்தின் மூலம் உண்மையைக் கண்டு, அவர்கள் உடனே தேவனிடத்தில், சரியாக திரும்பினர், பாருங்கள். எனவே, சாத்தான் ஜனங்களிடையே ஏதோ ஒரு காரியத்தை செய்ய முயன்றுகொண்டிருந்தான் என்பதையே அது காண்பித்தது; அவர்கள் அனைவரும் தேவபக்தியுள்ள, கிறிஸ்தவ ஜனங்கள். 35 அது அவர்களில் அநேகர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் உங்கள்மேல் எப்போதும் வைத்திருந்ததைக் காட்டிலும் அதிக நம்பிக்கையை உங்கள் மீது வைத்துள்ளோம்” என்று கூறும்படி செய்தது. 36 காரணம், என்னவென்று பாருங்கள், தேவன் எனக்களித்துள்ள வரத்தைக் கொண்டு, நான் என்ன செய்திருக்க முடியும்? தேசம் முழுவதையும் அல்லது ஜனங்களை என் காலடியில் கொண்டு வந்திருக்க முடியும். நாம் ஒரு தேசம் என்று குறிப்பிடுவது, “உலகிலுள்ள” அனைவரையும் அல்ல, இங்கிருந்து, யுத்தத்தில் பலியாகப் போகிறவர்களை அல்ல. நான் கிறிஸ்தவர்களை, உண்மையான விசுவாசியைக் குறிப்பிடுகிறேன், அதுவே சிறந்த…நாம் தேசத்தைக் குறித்து பேசுகிறோம், நாம் “மீண்டும் பிறந்த ஜனங்களைக்” குறித்து பிரசங்கிக்கிறோம், தேசத்தைப் குறித்து, அதைத் தான் நாம் பேசுகிறோம். இங்குள்ள ஒவ்வொருவரையும் அல்ல, நாம் வாழும் இவ்வுலகம் மிகவும் அசுத்தமாகவும், சேறாகவும் உள்ளது, அதாவது—அதாவது அவர்கள் மண்ணாயிருந்து மண்னுக்குத் திரும்புகின்றனர். நான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களையே, உண்மையான கிறிஸ்தவர்களைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன். 37 ஒரு காரியத்தைக் குறித்து ஒரு மனிதன் என் மீது மீண்டும் சீறி விழ நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அண்மையில் ஒருவர் என்னிடம் வந்து, “கிறிஸ்து தரையில் உமிழ்ந்ததைக் குறித்து, இந்தக் கருத்தை, தன்னுடைய உமிழ்நீரினால், சேறுண்டாக்கி, அதை ஒருவருடைய கண்களில் பூசினதைக் குறித்து” கூறினார். மேலும், “எவ்வளவு அசுத்தமும், அழுக்குமாயிருந்த, அவர் உமிழ்ந்த, அவருடைய வாயிலிருந்து வெளி வந்த அவருடைய உமிழ்நீரினாலே! அது எவ்வளவு சுகாதாரமற்றதாயிருந்தது, மண்ணிலே உமிழ்ந்து, சேறுண்டாக்கி, அதை ஒரு மனிதனுடைய கண்களின் மேல் பூசினார்” என்றார். நான், “ஆனால் அவன் பார்வையடைந்தவனாய் திரும்பி வந்தானே” என்றேன். பாருங்கள், அது தான். 38 மேலும் அந்த அதே மனிதன்! அவர்கள் என் இடத்திற்கு அருகில் நிர்வாணிகளின் முகாம் ஒன்றைத் திறந்தனர், உங்களுக்குத் தெரியும், நீச்சல் குளம். மேலும்—மேலும் அந்த மனிதன் தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று அந்த நீச்சல் குளத்தில் நீந்த நுழைவு சீட்டு வாங்கித் தந்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும் கூட, அங்கு அந்த நீச்சல் குளத்தில் நீந்துகின்றனர். என் சகோதரிகளே, என்னை மன்னியுங்கள். ஆனால் அங்கு நாள்தோறும் நீந்தச் செல்லும் ஏறக்குறைய நூறு அல்லது இருநூறு பெண்களில், ஒவ்வொரு நாளும்; ஸ்திரீகள், இன்று அந்த பெண்கள், எல்லா தீட்டுகளையும் மற்ற காரியங்களையும், அந்த தண்ணீரில் கழுவுகின்றனர், அவர்கள் வாயில் உள்ள அசுத்தம் மற்றும் அழுக்கை, அதை விழுங்கி, மற்றும் அதை வெளியே துப்புகின்றனர். அவர் என் மீது சீறி எழ வேண்டுமென்று நான் விரும்புகிறேன், பாருங்கள். 39 அவர்கள், “கிறிஸ்து இன்று வாழ்ந்து கொண்டிருந்தால், அவர் புரிந்த சுகாதாரமற்ற செயலின் நிமித்தமாக அவரை கைது செய்திருப்பார்கள்” என்றனர். 40 அதைக் குறித்து எப்படி? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அவர்கள் அந்த நீச்சல் குளத்திற்கு செல்கின்றனர், அவர்களில் அநேகர் வியாதிகளோடு, மேகப்புண், மேகவெட்டை நோய் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தோடும், அங்கு செல்கின்றனர். தண்ணீரை வாயிலெடுத்து துப்புவது போன்ற செயல் புரிந்து, அங்கேயே அந்த விதமாக சுற்றி கழுவிக் கொள்ளுதல். உண்மையாகவே, அது சுகாதாரமா? 41 எனவே, ஓ, என்னே, சகோதரனே, சகோதரியே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாள்! இது கர்த்தருடைய வருகைக்கான நேரமாயுள்ளதே! சபைக்கு ஒரே ஒரு நம்பிக்கையுண்டு, அது தான் கர்த்தருடைய வருகை. 42 பாருங்கள், அந்த காரியங்களை என்னால் நிறுத்த முடியாது; அது அவசியமும் இல்லை. அவைகள் இங்கே இருக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. என்னால் அவைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நியாயத்தீர்ப்பிற்கான அந்த நேரம் வருகிறபோது, அதற்கு நான் விரோதமாயிருந்தேன் என்பதற்கு, என் சத்தம் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அதற்கு விரோதமாயிருந்தேன். 43 இந்த வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதை நான் இன்னமும் விசுவாசிக்கிறேன். ஆகையால் இதற்கு முரணாக, உலகில் வேறெதும், இதை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இங்குள்ள இந்த வேதாகமம், இது சத்தியமாயிருக்கிறது, இது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. எனவே இப்பொழுது நமது—நமது—நமது கப்பலின் பாயை கீழே இறக்கி, அந்த சமாதானமுள்ள இளைப்பாறுதலின் துறைமுகத்தில் சிறிது நேரம் நங்கூரமிடுவோம். மேலும்—மேலும் நாளைக்கு நாம் கப்பலை வேறெங்காவது ஒட்டிச் செல்லலாம், ஆனால் இப்பொழுது நாம் நங்கூரமிட்டு நமது பரலோகப் பிதா தம்முடைய வார்த்தையின் மூலம் நம்முடன் பேசுகையில், அவருடைய சத்தத்தைக் கேட்போம், அவர் இன்று பேசுவாரென்று நாம் நம்புகிறோம். 44 மேலும் இன்றிரவு, இப்பொழுது, உங்களுக்குள்ள சிறு கேள்விகளைக் கொண்டு வாருங்கள். இப்பொழுது, மற்றவர்களுக்கு கெடுதி விளைவிக்கப்போகும் கேள்விகள் அல்ல. நீங்கள் அதைச் செய்தால், அப்பொழுது அது…நான் கண்டிப்பாக, அந்த கேள்விக்கு பதிலுரைக்க மாட்டேன், பாருங்கள். ஆனால் நீங்கள், வேறெதோ ஒன்றை, “பாருங்கள், இப்பொழுது, நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய நேரிட்டால், நாம் இதை செய்ய வேண்டுமென்று தேவன் கூறுகிறாரா?” என்று கேட்கலாம். அல்லது, உங்கள் இருதயத்தில் உள்ள சிறு கேள்விகள், உங்களுக்குத் தெரியும். அல்லது, “சகோதரன் பிரான்ஹாம், எங்களிடம் வரங்கள் கிரியை செய்து வருகின்றன, நாங்கள் இந்த விதமாக அல்லது அந்த விதமாக அவைகளை செயல்படுத்த வேண்டுமா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” அது வேதத்திலிருந்து நான் திருப்பி பதில் அளிக்கக் கூடிய ஒன்று, நீங்கள் பாருங்கள். அப்படிப்பட்ட ஏதோ ஒன்றை சிறியதாக எழுதிக்கொண்டு வாருங்கள். நான் மகிழ்ச்சியடைவேன். கேள்விகள் ஒன்றும் இல்லாமற்போனால், அப்பொழுது நான் ஏதாவதொரு பொருளைத் தெரிந்துகொண்டு, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு உங்களிடம் பிரசங்கிப்பேன். இது ஞாயிற்றுக்கிழமை, நான்… 45 சென்ற ஞாயிறு, நான் சகோதரன் காபிலுடைய சபைக்குப் போகப் புறப்பட்டேன். இந்த சபையில் மணி அடிப்பதைக் கேட்டேன், நான் முற்றத்தில் இங்குமங்கும் நடந்தேன். என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான். நான் உங்கள் மணி ஓசையைக் கேட்டேன், எனவே நான்—நான்—நான் வரவேண்டியதாயிற்று. 46 எனவே இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது வணங்கி, ஜெப வார்த்தையில், நம்முடைய சிருஷ்டிகரிடம் பேசுவோமாக. யாருக்காகிலும் ஒரு விசேஷித்த விண்ணப்பம் உண்டா? உங்கள் கைகளையுயர்த்தி, அப்படியே, “நான்…” என்று கூறுங்கள். அதை தெரியப்படுத்துங்கள். உங்கள் இருதயங்களில் என்ன உள்ளது என்பதை தேவன் அறிவார். இப்பொழுது உங்கள் விண்ணப்பங்களை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 47 மகா பரிசுத்தமுள்ள தேவனே, உமது மனதின் சிந்தைகளினாலும், உமது வாயின் வார்த்தையினாலும் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே. எங்கள் கர்த்தராகிய, இயேசு கிறிஸ்துவின் முலமாய், நீர் எங்களுக்காக செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்தும்படிக்கு, நாங்கள் உமது சமுகத்திற்குள்ளாக வந்துகொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இந்தக் காலையில், நாங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்றும், இந்தக் காலையில் எங்கள் ஸ்தானத்தையும், காலத்தின் சரித்திரத்தையும், வரவிருக்கும் எதிர் காலத்தையும் அறிந்துகொள்ள, நாங்கள் உமக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். தேவனுடைய கிருபையினால், நாங்கள் கல்வாரியின் இரத்தத்தினால் கழுவப்பட்டோம் என்றும், எங்கள் இருதயங்களில் உள்ள விசுவாசத்தினால், அவர் இன்று வருவாரானால், அவரை சந்திக்க நாங்கள் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள், “கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று சொல்ல வேண்டும். 48 மேலும் பாவம் பெருகி வருவதை நாங்கள் காண்கிறோம், பாவத்தின் விளைவினால் உலகம் தடுமாறிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. எப்படியாய் மது அருந்துதல், சூதாடுதல், குடித்து ஆடுதல், நிர்வாணம், மற்றும், ஓ, தேவனே, ஜனங்களின் அசுத்தமும், அழுக்கும், சேறுமாயுள்ளது. எப்படியோ அவர்கள், அவர்களால் உணர முடிந்தால், கர்த்தாவே! தேவபக்தியற்ற அந்த சிறிய பழைய ஆடைகளை அந்த விதமாக அணிந்து, அங்கே வெளியே தெருவில் செல்லும் அந்த பெண்கள், அவர்கள் பூச்சியும் தூசுமாக இருக்கிறார்கள் என்றும், இன்னும் ஒரு வாரத்தில், அவர்கள் மகிமைபடுத்திக் கொண்டிருக்கும் அந்த சரிரத்தை பூச்சிகள் தின்னக்கூடும் என்பதை அவர்கள் உணருகின்றார்களா? அந்த பட்டைப் புழு அதை தின்று போடும் என்றும், அப்பொழுது அவர்கள் ஆத்துமா தேவனற்றதாய், கிறிஸ்துவற்றதாய், ஒரு நம்பிக்கையுமற்றதாய் நித்தியத்தில் இருந்து, ஆழ்ந்த விரக்தியில் மூழ்கி, அவருடைய வருகையின்போது வெறுமனே அழிக்கப்படும் என்பதை அவர்கள் உணருகிறார்களா? ஓ தேவனே, இந்த அபாயத்தை அணுகிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவையும் நாங்கள் எச்சரிக்கும்படி, எச்சரிப்பைக் குறித்த—குறித்த சத்தங்களை எங்களுக்குத் தாரும். 49 இன்று எங்களோடிரும். பிரசங்கியின் புத்தகத்தில் ஒருமுறை சாலொமோன் கூறியவிதமாக, அதாவது நாங்கள் “புத்தியுள்ள சிற்பாசாரிகளாய்” இருக்கவும், “இந்த சபையின் மேய்ப்பர்களாக” இருக்கவும், எங்களுக்கு “ஞானத்தின் வார்த்தைகளைத்” தாரும். கர்த்தாவே, நாங்கள் கூற வேண்டிய வார்த்தைகளைத் தேடும்போது, இன்று காலை இங்கு மிகுந்த தேவையுள்ள இருதயம் அதைப் பற்றிக் கொள்ளும் தலைசிறந்த படைப்புகளாக அவைகள் இருக்க வேண்டும்—அவைகள் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 50 நாங்கள் மற்றவர்கள் எங்களை காணவேண்டுமென்று கருதி, இன்று உஷ்ணமான கூரையின் கீழ் இன்றைக்கு ஒன்று கூடவில்லை, ஆனால் நாங்கள் உம்மை நேசிப்பதனாலும், உம்மிடத்திலிருந்து கேட்க நாங்கள் வாஞ்சித்துக்கொண்டிருக்கிறபடியினாலும், நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் நேசிக்கும் எங்கள் நேசர் நீரே, உம்மிடமிருந்து வார்த்தைகளைக் கேட்க நாங்கள் வாஞ்சிக்கிறோம். நாங்கள் ஏற்கனவே உம்மிடமிருந்து கேட்டவைகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது எங்களிடம் நீடித்து நிற்கும். நாங்கள் உம்பேரில் காத்திருக்கையில், இன்றைக்கு நீர் எங்களுக்காக வைத்துள்ள பங்கை இப்பொழுது எங்களுக்கு அளிப்பீராக. நாங்கள் இதை இயசுவின் நாமத்தில், அவர் நிமித்தமாக கேட்கிறோம். ஆமென். 51 இப்பொழுது அது…[ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். ஒரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார்—ஆசி.] 52 ஆவியானவரிடத்திலிருந்து வந்துள்ள இந்த உயர்த்துதல்களுக்காக நாம் நன்றி யுள்ளவர்களாய் இருக்கிறேம், இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசப்போகும் வார்த்தைகளை நாம் கவனமாய் கேட்கும்படி அவை நமக்கு கூறி நம்மை எச்சரிக்கின்றன. மேலும் அவர் நமக்காக என்ன வைத்துள்ளார் என்று நாமறியோம், ஆனால் அவர் நமக்கு கொண்டு வரப் போகிற ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஒருக்கால் அது உங்கள் மனதில் உள்ள ஒரு கேள்விக்கு, அவர் இதன் மூலம் பேசுவதாயிருக்கலாம். அவர் இந்தக் காலை செய்தியின் மூலம் அவர் அதை உரைக்கலாம். அவர் இன்றிரவு ஆராதனையின் போது அதைக் கூறலாம். அவர், இன்றைக்கு எங்கோ, வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும்படி யாரையோ, அவர் எச்சரிக்க முயற்சித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. 53 இப்பொழுது எழுதப்பட்ட வார்த்தைக்கு நாம் திரும்பி, ஞாயிறு பள்ளி பாடத்திற்காக, யாத்திராகமம் புத்தகத்துக்கு செல்வோமாக. 54 உங்களுக்கு ஞானஸ்நான ஆராதனை ஒன்று உண்டா? [சகோதரன் நெவில், “இல்லை, இன்று மாலை ஆறு மணி வரை இல்லை” என்று கூறுகிறார்—ஆசி.] இல்லை. இந்த பிற்பகல் ஆறு மணிக்கு ஞானஸ்நான ஆராதனை இருக்கும். 55 நாம் யாத்திராமம் 17-ம் அதிகாரத்துக்குச் சென்று, 5-ம் வசனத்திலிருந்து—தொடங்கி, நான் நினைக்கிறேன், யாத்திராமம் 17-ம் அதிகாரத்தின் 5-ம் மற்றும் 6-ம் வசனம். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன்னுடைய கையில் பிடித்துக் கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ. அங்கே ஒரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; …அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். 56 இப்பொழுது நான் இதை ஞாயிறு பள்ளிப் பாடப் பொருள் என்று அழைப்பேனானால், இன்றைய காலை பாடத்திற்காக, கன்மலையிலிருந்து வருகிற என்றென்றும்-பிரசனைமாயுள்ள தண்ணீர், என்னும் பொருளாக நான் இதை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். 57 இஸ்ரவேல் எப்பொழுதுமே சரித்திரப் பிரகாரமான உதாரணமாகத் திகழ்கின்றனர் என்பதை நாமறிவோம். காரணம், அவர்கள் எகிப்திலிருந்து வெளி வரும் வரைக்கும், இஸ்ர வேலர் தேவனுடைய ஜனங்களாக இருந்தனர், அதன்பின்பு அவர்கள் தேவனுடைய சபையாயிருந்தனர், ஏனெனில் அவர்கள் ஏனைய உலகத்தோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டனர். 58 நாமும் உலகிலுள்ள மற்றவர்களினின்று பிரித்தெடுக் கப்படும்போது, அப்பொழுது நாம் சபையாகிறோம். ஆனால் நாம் ஏனைய உலகத்துடன் சிக்கிக்கொண்டிருக்கும் வரை, அப்பொழுது நாம் சபையில் இருப்பதில்லை. இப்பொழுது இது ஆழமாகப் பதிந்து, அது சேர வேண்டிய இடத்தை அடைகின்றது என்று நான் நம்புகிறேன். பாருங்கள், நாம் உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்படும் வரைக்கும் நாம் சபையாயிருப்பதில்லை. நம்மை பிரித்துக்கொண்டு, அசுத்தமான ஜனங்களை விட்டு வெளி வந்து, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், அவர்களுடைய பாவங்களில் பங்கு கொள்ளாமல் இருக்கவேண்டும். அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணக்கப்படாமல், உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள். 59 மேலும் இஸ்ரவேலர் எகிப்தில் இருந்தபோது, அவர்கள் தேவனுடைய ஐனங்களாயிருந்தனர். அதன்பின்னர் அவர்கள் வெளியே வரும்படி அழைக்கப்பட்டு, அல்லது யாத்திரையில், வெளியே வந்தவுடன், அவர்கள் தேவனுடைய சபை எனறழைக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் அப்பொழுதுதான் தங்களை உலகிலுள்ள மற்றவர்களினின்று வேறு பிரித்துக்கொண்டனர். 60 சபை என்னும் சொல்லுக்கு “வெளியே அழைக்கபட்டவர்கள்” என்று பொருள். யாத்திரை, “வெளியே அழைக்கப்படுதல்.” கிறிஸ்தவர்களாக, நாம் ஒவ்வொருவரும், நம்முடைய வாழ்க்கையில் ஒரு யாத்திரையை உடையவர்களாயிருந்து வந்துள்ளோம். நாம் நம்முடைய கூட்டாளிகளிடமிருந்து நாம் வெளியே அழைக்கபட்ட ஒரு நேரத்தை உடையவர்களாயிருந்தோம், நாம் ஒரு காலத்தில் ஐக்கியங் கொண்டிருந்த ஜனங்கள் மத்தியிலிருந்து வெளியே அழைக்கப்பட்டு, ஒரு வித்தியாசமான வழியில் செயல்பட்டு, ஒரு வித்தியாசமான வழியில் பேசின ஜனங்களுடன் நடக்க ஒரு வித்தியாசமான ஜனங்களானோம். அது நம்முடைய வாழ்க்கையில் ஒரு யாத்திரையாயிருந்தது. 61 இஸ்ரவேலர் ஜனங்களை கர்த்தர் வெளியே அழைத்தபோது, அவர்களை நமக்கு மிக அருமையான உதாரணமாக அளித்தார். அவர்களுக்கு ஒரு யாத்திரை உண்டாயிருந்தது, அவர்கள் அந்த—அந்த உலக மக்களிடையேயிருந்து பிரிந்து வெளியே வந்து, தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஜாதியாக, விசேஷித்த ஜனங்களாயினர். அவர்கள் கிருபாசனத்தின் நிழல்களின் கீழே நடந்தனர். அவர்கள் மகத்தான அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் வாழ்ந்து நடந்தனர். கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, அவர் வாக்குத்தத்த பண்ணியிருந்த தேசத்துக்குக் அழைத்துச் சென்றார். 62 மேலும், இந்த யாத்திரையில், அவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய தலைவன் அளிக்கப்பட்டான், ஒரு தலைவன், அவன் மோசேயாயிருந்தான், ஒரு—ஒரு மகத்தான மனிதனான அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மகத்தான தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் ஒரு தேவபக்தியுள்ளவனாயிருந்தான், அவன் ஒரு தேவபக்தியுள்ளவனாய் பிறந்தான். தேவன் அவனை தன் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே, அதற்கும் முன்னே அழைத்தார்; அந்த சந்ததிக்கு அவன் தலைவனாயிருக்கும்படி, அந்த ஜனங்களை இந்த யாத்திரையில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக, தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்பே அவனை நியமித்தார். 63 இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்னர், இங்கே இந்த கூடாரத்திலுள்ள சிறு பிள்ளைகளுக்கு நான் பேசி, அவர்களுக்காக ஒரு சிறிய செய்தியை அளித்திருந்தேன்; எப்படி யோகெபேத், அவள் எப்படி ஜெபித்தாள் என்றும், அவளும் அம்ராமும், மோசேயின் தகப்பன், ஜனங்களை விடுவிப்பதைக் குறித்த ஒரு காரியத்தை செய்வதைக் குறித்தும் கூறினேன் இல்லை ஒரு சிறிய விளக்கமளித்திருந்தேன். அப்பொழுது அம்ராம் தேவனுடைய தரிசனத்தை, இல்லை தேவதூதன், வடக்கு நோக்கி நின்று, என்ன சம்பவிக்கப்போகின்றது என்று அவனுக்குக் கூறினதைக் கண்டான். பின்னர் குட்டி மோசே பிறந்தான். அவர்கள் ராஜாவின் கட்டளைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சவேயில்லை. மோசேயின் மேல் தேவன் தம்முடைய கரத்தை வைத்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், மேலும் அதுவே அதைத் தீர்த்திருந்தது. அது உண்மை. ராஜா என்னதான் கூறினாலும் அரசியல் உலகம் என்னதான் கூறினாலும், வேறு என்ன கூறினாலும் கவலைப்படாமல், தேவனுடைய தம்முடைய கரத்தை மோசேயின் மேல் வைத்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே அவனை முதலைகளின் மத்தியில் கொண்டு விடுவதற்கும், அவர்கள் அஞ்சவில்லை; இந்த முதலைகள் யாவும் சிறிய எபிரெய பிள்ளைகளைத் தின்று கொழுத்திருந்தன, அங்கே அவர்கள் முதலைகளுக்கு பிள்ளைகளை ஆகாரமாய்க் கொடுத்திருந்தனர். அதேசமயத்தில் மோசே ஒரு சிறு நாணற் பெட்டியினுள் வைக்கப்பட்டு, முதலைகளின் மத்தியில், சரியாக அவைகளுக்கு மத்தியில் விடப்பட்டான். ஏனென்றால், அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை, தேவன் தம்முடைய கரத்தை மோசேயின் மேல் வைத்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 64 பாருங்கள், இப்பொழுது, அதேக் காரியத்தை, அதாவது நமது மகத்தான தலைவரான, பரிசுத்த ஆவியை நாம் அறிந்துகொள்ள முடியுமானால் நலமாயிருக்குமே, தேவன் அவரை அனுப்பியுள்ளார். அவர் நமது தலைவர். உலகம் என் கூறினாலும் கவலைப்படாமல், அவர்கள் எவ்வளவுதான் உங்களைப் பார்த்து சிரித்தாலும் உங்களைக் குறித்து பரியாசம் செய்தாலும், நாம் நமது தலைவரைப் பின்பற்றுவோமே! தேவன் பரிசுத்த ஆவியை நமது தலைவராக இருக்கும்படி அனுப்பியுள்ளார். புரிகிறதா? “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிபரியந்தம் உங்களோடிருந்து, உங்களுக்குள்ளே இருப்பேன்.” எனவே, நமது மகத்தான தலைவராகிய பரிசுத்த ஆவி, நம்முட கூட இருக்கிறார். இப்பொழுது நாம் இந்த தலைவரைப் பின்பற்றி, அவர் செய்யும்படி கூறுகிறதை அப்படியே செய்யவேண்டும். இந்த தலைவர் நம்மை பாதை தவறச் செய்யமாட்டார். அவர் எல்லா நேரத்திலும் வேதாகப் பாதையில் நம்மை நடத்திச் செல்வார். ஆனால் அவர் ஒன்றிற்காக ஒரு பக்கமும், வேருென்றிற்காக இந்த பக்கமும் விலகமாட்டார். அவர் வேதாகமப் பாதையில் சரியாக நிலைகொண்டு நடத்துவார். 65 இஸ்ரவேலரை பிரயாணத்தில் கொண்டு செல்ல மோசேக்கு ஒரு பாதை நியமிக்கப்பட்டிருந்தது, சிவந்த சமுத்திரத்தைக் கடந்து, யோர்தானைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தல். மோசே வழிவிலகவில்லை. தேவன் வழிவிலகவில்லை. ஜனங்கள் வழிவிலகினதால், தொல்லைகள் நேர்ந்தன. எனவே, இப்பொழுது இந்த காரியங்களைக் குறித்து நாம் சிந்திப்போம். (என்னை மன்னிக்கவும்.) 66 மோசே, அபிஷேகம் பண்ணப்பட்ட தலைவனாயிருந்தான். முடிவிலே, அவன் தேவனால் மாத்திரம் செய்யக் கூடிய அடையாளங்களையும் அற்புதங்களையும், ஜனங்களுக்கு காண்பித்திருந்தபோது, அவன் இஸ்ரவேலருடைய முன்னிலையிலும் முப்பர்களின் முன்னிலையிலும் இவைகளைச் செய்து காண்பித்தபோது, எகிப்து தேசத்திலிருந்து அவர்களை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த நன்மையான தேசத்திற்கு அவர்களைக் கொண்டு செல்ல, மோசே அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான் என்ற திருப்தியை அவர்கள் அடைந்திருந்தனர். அதன்பின்பு மோசே தேவனின் நாமத்தில் இந்த மகத்தான செயல்களைப் புரிவதை அவர்கள் கண்டபோது, அவனைப் பின்பற்ற அவர்கள் சித்தம் கொண்டனர், அவன் அவர்களை வெளியே கொண்டு வந்து, சிவந்த சமுத்திரத்தின் வழியாக உலர்ந்த தரையில் கடக்கச் செய்து, வனாந்திரத்தின் வழியாக யாத்திரையில் கொண்டு சென்றான், அது அவர்கள் சோதனையின் நேரமாயிருந்தது. 67 ஒரு நபர் கிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது, எல்லாமே தலைகீழாகிவிட்டதுபோல அவனுக்கு தோன்றுகிறது. ஆனால், இந்த மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் வருவதற்கு முன்பு; இந்த நபர், அவன் முதலாவதாக பரிசுத்தமாக்கப்படுதலின் செயல்முறையை உடையவனாய் இருக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் அவன் ஒரு சோதனையின் நேரத்தை உடையவனாக இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்குமே அது உண்டாயிருந்தது. அவருக்கு இந்த சோதனை நேரம் இருந்தது. “தேவனிடத்தில் வரும் தேவனுடைய புத்திரன் ஒவ்வொருவனும், முதலாவது சிட்சிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். நாம் சிட்சையை சகிக்க முடியாவிட்டால், நாம் தேவனுடைய புத்திரராயிராமல்; வேசிப்பிள்ளைகளாயிருக்கிறோம், அப்பொழுது நாம் தேவனுடைய புத்திரர் அல்ல” என்று வேதம் கூறியுள்ளது. ஆனால் “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” என்பதை அறிந்து சிட்சையை சகிக்கும்போது, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், அதன்பின்பு அவர் மீட்கப்படும் நாள் வரைக்கும் நம்மை பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கிறார். பாருங்கள், அது தான் நாம் கடந்து செல்லவேண்டிய சிட்சை, பிரயாசை. இஸ்ரவேல், சரித்திரப்பிரகாரமான ஒரு முன்னடையாளமாக, இந்த சிட்சையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 68 இப்பொழுது, அவர்கள் எகிப்திலிருந்தபோது, கர்த்தர் மோசேயை அனுப்பினார். அவன் கோலை நீட்டினான், அப்பொழுது வண்டுகளும், பேன்களும் பூமியில் தோன்றின. அவன் சூரியனுக்கு நேராக நீட்டினபோது, அது அஸ்தமித்தது. அவன் தண்ணீரின் மேல் கோலை நீட்டினபோது, அது இரத்தமாக மாறினது. ஏன், இஸ்ரவேலருக்கோ கானானில்…—கோசேனில், ஒரு மகிமையான தருணம் உண்டாயிருந்தது; அங்கு சூரியன் அஸ்தமிக்கவில்லை, அவர்களை வாதைகள் தாக்கவில்லை; ஏன், அவர்கள் ஒரு மகத்தான தருணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனரே! 69 நீங்கள் முதலில் இரட்சிக்கப்பட்டபோது, உங்களுக்கு இருந்ததுபோல. ஒவ்வொரு காரியமும், பறவைகள் வித்தியாசமாகப் பாடின, ஒவ்வொன்றும் இனிமையாயிருந்தது. ஓ, என்னே, நீங்கள் முதலில் இரட்சிக்கப்பட்டபோது, ஒவ்வொரு காரியமும் எப்படி இனிமையாக இருந்தது! ஆனால் அதன்பின்பு சோதனையின் நேரம் வந்தது, சிட்சிக்கப்படுதல், பரிசுத்தமாகுதலின் நேரம், உலகின் காரியங்களிலிருந்து உங்களை பரிசுத்தமாக்குதல், “பாரமான யாவற்றையும், உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுதல்.” நீங்கள், ஒரு மனிதன், உங்களுடைய புகைபிடிப்பதையும், உங்களுடைய மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும், நீச்சல் குள அறைகளுக்கு நீங்கள் செல்வதையும், உங்களுடைய முழு இரவு சீட்டாட்டத்தையும் நிறுத்த வேண்டும். அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள விசவாசத்தைக் கொண்டு அவைகளுக்காக நீங்கள், உங்களையே பரிசுத்தமாக்க வேண்டியதாயிற்று. உங்களை பரிசுத்தமாக்குவது! பெண்களாகிய நீங்கள் உங்கள் தலைமுடியை நீளமாக வளரச் செய்து, உங்கள் உடைகளை நீளமாக்கி, நீங்கள் முன்பிருந்ததைவிட வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டியதாயிற்று. பரிசுத்த மாக்கப்படுதலின் நேரம்! அநேக முறை அவர்கள் முரட்டாட்டம் பண்ணி, தங்கள் பழைய வழக்கங்களுக்குச் சென்றனர்; பாருங்கள், அது ஒரு தேவனுடைய பிள்ளை அல்ல, பாருங்கள். தேவனுடைய பிள்ள கல்வாரியை நேராக நோக்கி, அது அவனுடைய நன்மைக்காக என்று அறிந்து கொள்கிறான். 70 ஆகையால் அந்த நேரத்திற்குப் பின்னர், இஸ்ரவேலில், அங்கே பெரிய விழுந்து போதல் நேர்ந்தது. இந்த பெரிய நெருக்கமான நேரம் வந்தபோது, அப்பொழுது அவர்கள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு, விழுந்துபோகத் தொடங்கினர். அதன்பின்னர் அவர்களுடைய பேச்சில், “பாருங்கள், நாம் எகிப்திலேயே தங்கியிருந்தால் நலமாயிருக்கும். நம்முடைய ஆத்துமாக்கள் இந்த மெல்லிய அப்பத்தை வெறுக்கின்றன” என்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், நான் அதை இப்பொழுது சரித்திரப்பிரகாரமாக எடுத்துக் கொண்டால், அதைத் தான் அவர்கள் கூறினர். 71 இப்பொழுது நவீன காலத்தில், அது, “ஓ, ஒவ்வொரு புதன் இரவும் ஜெபக் கூட்டம்! ஒவ்வொரு ஞாயிறு காலையிலும், மறுபடியும் சபைக்கு போக வேண்டியதாயுள்ளதே! நாம் என்ன கேட்கிறோம்? அதேக் காரியம்; போதகர் நின்று கொண்டு பிரசங்கம் செய்கின்றார்; பாடல்கள்; மீண்டு அதுவே” என்கின்றனர். பாருங்கள், அப்படியானால் நீங்கள் கடமைக்கு அங்கு செல்கின்றீர்கள். நீங்கள் ஒரு ஆராதிப்பவரல்ல. ஆராதிக்கும் ஒருவன் தன்னுடைய தேவனுக்கு முன்பாக தன்னை வெளிப்படுத்தவும், ஆராதிக்கவும், அவருடைய நன்மைகளுக்காக தேவனைத் துதிக்கவும் அங்கு செல்கிறான்; ஒவ்வொரு வார்த்தையையும், அவன் அதைப் பற்றிக்கொள்கிறான். 72 அது ஒரு காதல் விவகாரத்தைப் போன்றது. நீ ஒரு பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தது, அது ஒரு கடமை என்று நீ அறிந்திருந்தால், அல்லது நீ வாலிபமாயிருந்தபோது, நீ ஒரு பையனோடு சென்று கொண்டிருந்தது. “இந்தப் பையனோடு நான் செல்ல வேண்டும் என்று அம்மா விரும்புகிறார், ஆனால் என்னால் அவனோடு சகித்துக் கொள்ள முடியவில்லை.” அவன் வந்து உன்னைப் பார்ப்பதில் உனக்கு ஒன்றும் கிடைக்காது. இல்லையென்றால், பெண்ணைக் குறித்து பையனுக்கும், அல்லது பையனைக் குறித்து பெண்ணுக்கும் அதேவிதமாகத்தான் என்றால். நீ அவளுடன் செல்லும்போது, அவள் உன்னை சலிப்படையச் செய்கிறாள்; நீ அவளுடன் செல்வதை தாய் விரும்புகிறாள், ஏனெனில் அவள் அம்மா விரும்புகிற மாதிரியான பெண்ணாய் இருக்கிறாள். பாருங்கள், அது உன்னை சலிப்படையச் செய்கிறது; காதல் விவகாரம் எதுவும் இல்லை. எனவே நீ பொருட்படுத்துவதில்லை, நீ சுத்தப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை, நீ போய் அவளைக் காண விரும்பவில்லை. அது ஒரு…ஏன், அது ஒரு பயங்கரமான காரியம். மேலும் அவன் உன்னைக் காண வரும்போது, என்னே, அவன் சீக்கிரம், வீட்டிற்குச் சென்றுவிட்டால் நலமாயிருக்கும் என்று நீ விரும்புவாய். 73 “அவர் ஏன் மிக நீண்ட நேரம் பிரசங்கம் செய்கிறார்? இதைக் குறித்தெல்லாம் மற்றும் ஒவ்வொரு காரியத்தைக் குறித்து என்ன?” என்று நீ கூறும்போதும் அந்தவிதமாகவே அது உள்ளது. பாருங்கள், நீங்கள் அன்பு கொள்ளாமல் இருக்கிறீர்கள். 74 ஆனால் இன்று காலை ஆவியானவர் உனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளபடியால், நீ ஒவ்வொரு வார்த்தையையும் இறுகப் பற்றிக்கொள்ளும்போது, பாருங்கள், “ஒவ்வொரு வார்த்தையும் இறுகப் பற்றிக் கொளுதல்.” அதைக் குறித்து தான் ஒருக்கால் அவர் உங்களுக்கு உரைத்திருப்பார். இறுகப் பற்றிக் கொள்ளுதல்! தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும், நித்தியஜீவனாயுள்ளது. சூழ்நிலை என்னவாயிருப்பினும், சபைக்கு செல்லுதல் ஒரு மகிழ்ச்சியாயிருக்கிறது. அது உஷ்ணமானாலும், குளிரானாலும், அலட்சியமானாலும், ஜனங்கள் வீண் சந்தடி செய்துகொண்டிருந்தாலும், உறுமினாலும், அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும், கர்த்தருடையடைய வார்த்தையைக் கேட்பது அப்பொழுதும் ஒரு மகிழ்ச்சியாகவேயிருக்கிறது. அப்படியானால் நீ உண்மையாகவே கிறிஸ்துவோடு அன்பு கொண்டிருக்கிறாய், பாருங்கள், நீ செல்ல பிரியப்படுவாய். 75 “பாருங்கள், தேனே, இதோ மீண்டும் ஞாயிறு காலை வந்துள்ளது, நாம் பிள்ளைகளுக்கு முகம் கழுவி, அங்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னே, அது சலிப்பாயுள்ளதே!” என்பாயானால், பாருங்கள், நீ அன்பு கொண்டிருக்கவில்லை. 76 ஆனால் நீங்கள் உண்மையாகவே அவரில் அன்பாயிருந்தால், ஞாயிறு காலை வரும் வரை உன்னால் காத்திருக்க முடியாது, அவர்களுடனிருக்க நீங்கள் சென்று விடுவீர்கள். மேலும் நாம், புறப்பட…தேவனுடைய ஜனங்கள், அவர்கள் உங்களை சலிப்படையச் செய்வதில்லை. ஏன், அவர்கள்—அவர்கள் சகோதர சகோதரிகளுமாயுள்ளனர். நான் வழக்கமாக கூறுவது போல, “ஒரு குளிர்ந்த காலையில் நீங்கள் சோள வெல்லப் பாகைப்போல அவ்வளவு கெட்டியாகிவிடுகின்றீர்கள்.” அது—அது கரைவதில்லை, அது ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளுகிறது, உங்களுக்குத் தெரியும், அது இறுகிவிடும். இப்பொழுது, அது ஒரு நயமற்ற வெளிப்படுத்துதல், ஆனால் நான் என்ன பொருட்படுத்துகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படியாக இதைக்—இதைக்—இதைக் கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் பாருங்கள். நீங்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். குளிர் அதிகமாகுந்தோறும், அது இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொள்கின்றது. அந்தவிதமாகத்தான் அது நம்மோடு இருக்க வேண்டும். குளிர்ந்த… பூமிக்குரிய நண்பர்கள் கைவிடும்போது, அவரை இன்னும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். 77 நாம் முக்கியமானவர்கள் என்பதனால், நாம் ஒருவரிலொரு வர், அன்பு கூருவதில்லை; ஆனால் நாம் அன்பு கூறுவது, ஒவ்வொருவருக்குள் இருக்கும் கிறிஸ்துவாகும், நீங்கள் பாருங்கள். அதாவது நாம் அன்பு கூறுகிறது, நம்முடைய ஜீவியங்களிலிருக்கிற தேவனாகும். இப்பொழுது நாம் ஒன்று கூட பிரியப்படுகிறோம். இந்த பழைய பாடலை நாம் பாடுவதுண்டு: நம்முடைய இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் உறவு ஆசிர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் பரத்தில் உள்ளதைப் போன்றது. பாருங்கள், ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் பரத்தில் உள்ளதற்கு ஒப்பானது. நம்முடைய பிதாவினுடைய சிங்காசனத்திற்கு முன்பாக, நமது ஆர்வமான ஜெபங்களை ஊற்றுகிறோம்; நமது பயங்களும், நமது நம்பிக்கைகளும், நமது குறிகோள்களும், நமது ஆறுதல்களும், நமது கவலைகளும் ஒன்றாயுள்ளன. 78 புரிகிறதா? ஆம், ஐயா! ஒருவர் ஒரு ஆசீர்வாதத்தை உடையவராயிருக்கும்போது, நாம் அனைவருமே அதைக் குறித்து மகிழ்ச்சி கொள்கிறோம். ஒருவர் துக்கப்படும்போது, நாம் அவருடன் துக்கப்படுகிறோம். நாம், நாம் அனைவரும் ஒன்றாயிருக்க விரும்புகிறோம். இப்பொழுது நாம் அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும். 79 இஸ்ரவேலரும் அவ்வாறே இருக்க வேண்டிய வர்களாயிருந்தனர். ஆனால் அது அவர்களுக்கு பாரமாகி, “ஓ, இந்த பழைய மெல்லிய அப்பம், தூதர்களின் அப்பம்! பாருங்கள், நாம் ஏன் இந்த பழைய மெல்லிய அப்பத்தைக் குறித்து கவலைப்படுகிறோம்? எங்கள் ஆத்துமாக்கள் இந்த அப்பத்தை வெறுக்கின்றதே! எல்லாமே தவறாயுள்ளது. மேலும்—மேலும் ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து விழும் இந்த மன்னாவைக் காட்டிலும், ஏன், எகிப்திலுள்ள வெள்ளைப் பூண்டையும் கொம்மட்டிக் காயையும் புசித்தால் நலமாயிருக்கும்” என்றனர். நீங்கள் பாருங்கள், அவர்களுடைய இருதயங்கள் யாத்திரைக்கு ஆயத்தமாயிருக்கவில்லை. 80 ஒரு மனிதனோ அல்லது ஸ்திரியோ சபைக்குச் செல்வதைக் குறித்துக் குறை கூறி, அவர்கள் சபைக்கு செல்வதைக் குறித்து மிகவும் சோர்வுற்றால், அவர்கள் யாத்திரைக்கு ஆயத்தமாகவில்லை. அது உண்மை. எங்கோ ஏதோ தவறுள்ளது. 81 ஓ, நீங்கள் தேவனில் அன்பு கூர்ந்து, நீங்கள் அனைவருமே ஒருமித்து, பரலோகத்துக்குச் செல்வதாக நீங்கள் எண்ணியிருக்கும்போது! என்னே ஐக்கியம், என்னே தெய்வீக சந்தோஷம், நித்திய புயத்தின் மேல் சார்ந்திருப்பேன்; ஓ, என் கர்த்தர் மிக அருகாமையில் இருப்பதனால் என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானம், அவருடைய நித்திய புயத்தின் மேல் சார்ந்திருப்பேன். என்ன ஒரு…இந்த பாடல்களை நாம் பாடுகிறோம். நாம் நம்முடைய பரிமாற்றமான துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், நம்முடைய பரிமாற்றமான பாரங்களைச் சுமந்து கொள்கிறோம்; அடிக்கடி நாம் ஒவ்வொருவருக்காகவும், அனுதாபக் கண்ணீர் வழிந்தோடுகிறது. நாம் பிரிந்து செல்லும்போது, நமக்குள் அது வேதனையை அளிக்கிறது; ஆயிலும் நாம் இன்னமும் இருதயத்தில் இணைந்தவர்களாய், அடுத்த ஜெப கூட்ட நேரத்தில் மீண்டும் சந்திப்போமென நம்புகிறோம். (ஆம், ஐயா, இருதயத்தில் இன்னமும் இணைந்துள்ளோம்!) 82 இப்பொழுது நீங்கள் யாத்திரைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள், பாருங்கள், நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். சோதனையின் நேரங்கள், அது ஆபத்தான இடம்; வனாந்தரம், சோதனையின் நேரங்கள். 83 இஸ்ரவேல், தன்னுடைய சோதனை நேரத்தின்போது, அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு, வீண் சந்தடி செய்து, அப்பத்தை வெறுத்தனர். மேலும் அவர்கள் எகிப்துக்கு திரும்பிச் செல்ல விரும்பினர். 84 அதன்பின்னர் அவர்கள் தங்கள் தலைவனைக் குறித்தே குறை கூறத் தொடங்கினர். ஓ, அவன் அவர்களை வழி தவறச் செய்துகொண்டிருக்கிறான் என்று அவர்கள் பயந்தனர்; அவன் தன்னை ஒரு தலைவன் என்று காண்பித்த பிறகும், அவன் தலைவன் என்பதை தேவன் நிரூபித்திருந்தார். “பாருங்கள், ஒருக்கால் நாம் சற்று மூடபக்தி வைராக்கியமுள்ளவர்களாய் நடந்துவிட்டோம். மேலும்—மேலும் ஒருக்கால் நாம் யாவரும், வழி தவறிவிட்டோம்,” அல்லது, இப்படிப்பட்ட வேறெதாவது ஒன்றைக் கூறுதல், பாருங்கள், அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும், தேவனுக்கும் அவருடைய தலைவனுக்கும் எதிராக பேசிக்கொண்டிருந்தனர். 85 இப்பொழுது நாம், “வார்த்தைக்கு அர்த்தம் இதுவா அல்லது இல்லையாவென்று எனக்குத் தெரியாது,” மற்றும், “பரிசுத்த ஆவியைக் குறித்து எனக்குத் தெரியாது; எனக்கு அதைக் குறித்து சிறிது சந்தேகம் இருக்கிறது. அதை அறியாத மற்றவர்களை எனக்குத் தெரியும்” என்று கூறும் ஒரு நிலைக்கு நீங்கள் வரும்போதே. பாருங்கள், எகிப்துக்கு திரும்பி விடுகின்றீர்கள். புரிகிறதா? 86 நீங்கள் பாதையில் நிலைத்திருக்க வேண்டுமென்று உண்மையாய் தீர்மானங் கொண்டிருந்தால், இந்தத் தலைவருடன், பரிசுத்த ஆவியானவருடன் நிலை கொள்ளுங்கள், வார்த்தையில் நிலைகொள்ளுங்கள். நீங்கள் ஆவியோடு நிலை கொள்ளும்போது, அது உங்களை வார்த்தையில் நிலை கொள்ளச் செய்யும். அது உண்மை. அது உங்களை வார்த்தையின் பாதையில், வழி நடத்திச் செல்லும். அதைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம். அது உங்களுக்கு தீங்கு செய்யாது, நீங்கள் காயப்பட்டால், அது உங்களுக்கு உதவி செய்யும். அது எல்லா காயங்களையும் ஆற்றும், பரிசுத்த ஆவியானவர் ஆற்றுவார். 87 இப்பொழுது இந்த சாலையில், அவர்கள் இந்த விதமாக வந்தப் பிறகு, அவர்கள் ஒரேப் என்னும் ஒரு இடத்தை அடைத்தனர் என்று நாம் கண்டறிகிறோம். மேலும் ஓ-ரே-ப், ஓரேப், அதன்பின்னர் நாம் கண்டறிவது…நாம் அந்தப் பெயரை விளக்குவோம். அங்குதான் அந்த—அந்த ஓரேப் என்ற பெயர் ஒரு “வறண்ட இடம்” அல்லது ஒரு “பாலைவனம்” என்று பொருள்படுகிறது. 88 தாம் சபையில் ஒருவரோடொருவர் கொண்டுள்ள ஐக்கியத்தினின்றும், பரிசுத்த ஆவியானவருடன் கொண்டுள்ள ஐக்கியத்தினின்றும் விலகிவிடும் போது, அது நம்மை ஒரு உலர்ந்த இடத்திற்கு, ஒரு பாலைவனத்திற்கு கொண்டு வருகிறது, அங்கு ஒன்றுமே உயிர் வாழ்வதில்லை, ஒவ்வொன்றும் அதன் மேல் குத்துந்தன்மைகொண்டதாய் மாத்திரமேயுள்ளது. பாருங்கள், ஒரு—ஒரு வனாந்திரம், ஒரு சிறு கற்றாழைத் துண்டு அதன் மேல் குத்துந்தன்மை கொண்டது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது தண்ணீர் இல்லாத ஒரு விலைமதிப்பற்ற சிறிய மிருதுவான இலை, அது ஒரு குத்துந்தன்மையாகும்படி தானாகவே இறுகிக்கொள்கிறது. அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் காணும்போது, அதற்கு மாத்திரம் சரியானபடி தண்ணீர் கிடைத்திருந்தால், அது ஒரு விலையேறப் பெற்ற ஆத்துமாவாயிருக்கும், ஒரு மென்மையான சிறிய இலையாய் அல்லது ஏதாவதாயிருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, அது தன்னை இறுகச் சுற்றிக் கொண்டு குத்துந்தன்மையாகி, எல்லாவற்றையும் குத்துகிறது, உங்களுக்கு தெரியுமா, குறையும் கண்டு பிடிக்கின்றது. அதற்கு தேவையானது தண்ணீர் மட்டுமே. அவ்வளவுதான். அதற்கு ஒரு—ஒரு எழுப்புதல், இல்லையென்றால் ஒரு பிரித்தல், கர்த்தரிடத்திலிருந்து ஒரு புத்துணர்ச்சியே தேவைப்படுகிறது. நீங்கள் அதற்கு தண்ணீர் கொடுத்தால், அது—அது தன்னுடைய தன்மையை வெளிப்படுத்தும். 89 ஆனால், அந்த இடத்தில் வசிப்பவர்கள் அந்த சூழ்நிலையின் காரணமாக அவதியுற வேண்டியவர்களாய் இருந் கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ விரும்புகிறவர்கள், ஒவ்வொரு காரியத்திலும் குத்துவதும், வம்பு செய்வதும், மற்றும் சண்டையிடுவதும் அதைப் போன்று கடுஞ்சினக்கு முறல், பாருங்கள், நீங்கள் அந்த சூழ்நிலையில்தான் வாழ்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் நாம் அங்கு வசிக்க வேண்டியதில்லை, நாம் அங்கே தரித்திருக்க வேண்டிய அவசியமில்லை. 90 இப்பொழுது, இந்த ஓரேப் என்னுமிடத்தில் தேவனுக்கு ஜனங்களின் மேல் சோர்வு உண்டானது, ஏனெனில் இவர்கள் இவ்விடத்தில் அலைந்து திரிந்து இந்நிலையையடைந்திருந்தனர். அவர்கள் அந்த பாதையில் நடக்க மனதில்லாதிருந்தபடியால், அவர் அவர்களை சுற்றி அழைத்து வந்தார். அவர்களோ பாதை தவறி—பிரதான பாதையை விட்டு, பக்க பாதையில் நுழைந்தனர். அப்பொழுது இது தேவன் ஒரு பயங்கரமான செயலைப் புரியக் காரணமாயிற்று. அவர்…மோசே தேசத்தை நியாயத்தீர்த்த அந்த நியாயத்தீர்ப்பின் கோலை எடுத்து, தண்ணீரைக் கொண்டு வர, கன்மலையை அடிக்கும்படி தேவன் செய்தார். 91 இப்பொழுது, இதை நாம் புரிந்து கொள்வோமானால், இதில் ஒரு அழகிய பாடம் இங்கே உள்ளது, பாருங்கள். நாம் நிலை தவறி, உலகக் காரியங்களில் சிக்குண்டதனால், தேவன் உலகத்தின் தியாயத் தீர்ப்பை கையிலெடுத்து, நாம் சுயாதீனராவதற்காக, தமது சொந்த குமாரனைக் கல்வாரியில் அடிக்க வேண்டியதாயிற்று. நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? 92 இப்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு அடைந்தவுடன், அவர்களுக்குத் தண்ணீர் அளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த உலர்ந்த இடம் கல்வாரியாக ஆக்கப்பட்டது. அங்கு தேவன் மோசேயை நோக்கி, அவர், “உன் கோலை எடுத்துக் கொண்டு, மூப்பரைக் கூட்டிக் கொண்டு போ, நான் உனக்கு முன்பாகக் கன்மலையின் மேல் நிற்பேன்” என்றார். இந்தக் கன்மலை கிறிஸ்துவே. மோசே, அவன் இஸ்ரேல் தேசத்தின் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்திருந்த கோலோடு, இந்த அதே கோலை எடுத்துக் கொண்டு, தேவனுடைய நியாயத் தீர்ப்புகளை அந்த கன்மலையின் மேல் அடித்தான். பார்த்தீர்களா? ஜனங்களுடைய பாவங்களை அவன் கோலில் எடுத்துக்கொண்டான். அதைக் கொண்டு, அவன் ஜனங்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் ஜனங்களை அடிப்பதற்கு பதிலாக, அவன் கன்மலையை அடித்தான். அந்தக் கன்மலை, தேவனுடைய கிரியையின் மூலம், இரட்சிப்பைக் கொண்டு வந்து, அழிந்துபோகின்ற ஜனங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வந்தது. அது மரித்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஜீவனைக் கொண்டு வந்தது. தேவன் தம்முடைய—தம்முடைய கோலான ஒரு நியாயத்தீர்ப்பின் கோலை எடுத்து அதைத்தான் செய்தார், தேவன் இந்தக் கோலில் என்னுடைய பாவங்களையும், உங்களுடைய பாவங்களையும் சுற்றிக்கொண்டார்; அது நம்மை அடித்திருக்கவேண்டும், ஆனால் அது கிறிஸ்துவை அடித்தது; அவரிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது, அதாவது “ஆவி,” நமக்கு ஜீவனையளிக்க பரிசுத்த ஆவி அவரிலிருந்து புறப்பட்டு வந்தது. இப்பொழுது நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். இப்பொழுது, அந்த கன்மலை கிறிஸ்துவாயிருந்தது. இப்பொழுது நாம் கவனிக்க வேண்டும். 93 இந்தக் கன்மலையைக் குறித்த அநேக அறிவுப்பூர்வமான ஓவியங்களை நான் கண்டிருக்கிறேன். அண்மையில், அவைகளில் மிக முக்கியமான ஒன்றை நான் பார்த்தேன், அதில் ஒரு குன்றின் உச்சியில் ஒரு—ஒரு சிறு பாறை அங்கே இருந்தாக வரையப்பட்டிருந்தது. மேலும்—மேலும் மோசே இந்தக் கன்மலையை அடித்திருந்ததாக கருதப்பட்டு, இஸ்ரவேலர் அங்கே கீழேயிருந்து ஒரு தேநீர் கோப்பையினால் தண்ணீரைப் பிடிப்பது போலவும், இந்த கன்மலையிலிருந்து தண்ணீர் சிறிதாக தெறித்து விழுவதை குடிப்பது போன்றுமிருந்தது. இப்பொழுது அது யாரோ ஒருவரின் யோசனையாயிருந்தது. 94 அனால் இந்த கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டபோது, இருபது இலட்சம் ஜனங்கள் மட்டுமல்லாமல், காளைகள், ஓட்டகங்கள், மற்றும் ஒவ்வொன்றும் அதிலிருந்து வந்த தண்ணீரைத் தொட்டிகளில் பருகின. அது அங்கிருந்து புறப்பட்டு பாய்ந்தோடின ஒரு நீரோடையாயிருந்ததே! 95 இன்றைக்கு அவர்கள் பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவை அப்படித் தான் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். “அது ஒரு சிறு தெளிப்பு.” பாருங்கள், தேவன் ஒருவர் உண்டு என்று உங்களை விசுவாசிக்கச் செய்ய போதுமான அளவு. இல்லையே. 96 அது திரளான தண்ணீராயிற்றே! தாவீது, “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது!” என்றான். அது பரிசுத்த ஆவியின் பொங்கிப் பீறிட்டுப் பாய்தலாயுள்ளது. 97 ஜனங்கள் அதைக் கண்டு பயப்படுகின்றனர். சில ஜனங்கள், “பாருங்கள், நான் இதை அல்லது அதை செய்துவிடுவேன் என்றும், அல்லது நான் சற்று ஆழமாக செல்ல நேர்ந்தால், நான் சற்று பயப்படுகின்றேன். சிறிது தூரம் சென்ற யாராவது ஒருவரை உங்களுக்கு என்னால் காண்பிக்க முடியும்” என்கின்றனர். ஆனால் ஒருவர் போதுமான தூரம் செல்லவில்லை என்பதை நீங்கள் ஒருபோதும் சுட்டிக் காண்பிக்க வேண்டாம். புரிகிறதா? ஆமாம், போதிய அளவு தூரம் செல்லாத வர்களைக் குறித்து எப்படி? 98 இப்பொழுது, மாம்சீகமான செயல்களில் ஈடுபட்டு, தவறான பாதையில் வழிவிலகிச் சென்ற சிலரை நாம் உடையவர்களாய் இருந்து வந்துள்ளோம். மேலும்—மேலும் தேவன் அல்ல, ஜனங்கள் தான் அவ்விதம் செய்தனர்…நல்ல தலைமை இல்லாதது, போன்ற காரணத்தால், அவர்கள் தவறான பாதையில் சென்று, அவர்கள் மூட மதாபிமானத்திற்குள் சென்றுவிட்டனர். அதன்பின்னர் முழு உலகமும், பிசாசு அவர்களைச் சுட்டிக்காட்டி, “அதைப் பாருங்களேன்! அதைப் பாருங்களேன்!” என்கின்றது. 99 பாருங்கள், இன்னும் ஒரு துவக்கத்தைக் கூட ஒருபோதும் செய்யாமலிருக்கிற கோடிக்கணக்கானவர்களை இன்று காலையில் நான் நின்று சுட்டிக் காட்டட்டும். அவர்களைக் குறித்தென்ன? பாருங்கள், அவர்களுடைய நிலையை நோக்கிப் பாருங்கள். இன்றைக்கு எய்க்மனைப் போன்றுள்ள ஒரு நபரை நோக்கிப் பாருங்கள், உயரிய…அவர்கள், “பெந்தெகொஸ்தேயினர் ஒழுக்கமற்றவர்கள் மற்றும் அருவருப்பானவர்கள், மேலும் அவர்கள் படிக்காதவர்கள்” என்று அதைப்போன்றெல்லாம் கூறு கின்றனர். உலகத்தில் மிக உயர்ந்த படித்த மனிதர்களில் ஒருவரான, எய்க்மனைப் பாருங்கள். அவன் அறுபது இலட்சம் குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களையும், கொன்று போட்டானே, அறுபது இலட்சம் ஆத்துமாக்கள். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் சுட்டிக் காண்பிக்க விரும்பவில்லை. 100 ஆனால் படிக்கத் தெரியாத சில நபர்கள், வேகாகமத்திலுள்ள சில பெயர்களைக் கூட தவறாக அழைக்கக் கூடியவர், அல்லது ஏதாவது சொல்லியிருக்கலாம் அல்லது ஏதாவது தவறு செய்திருக்கலாம், அல்லது ஏதேனும் தவறு செய்திருந்தால், செய்தித்தாள்கள் அதை எல்லா இடங்களிலும் எழுத விரும்புகின்றன, மேலும், “அவர்கள் நம்பப்படத்தக்கவர்களல்ல” என்று கூறுகின்றன. 101 ஆகையால் அதை நம்பமுடியாவிட்டால், கல்வியினால், அவர்களிடம் இன்றுள்ள அறிவுப்பூர்வமான காரியங்களை ஏன் நம்பக்கூடாது? அடால்ஃப் ஹிட்லரைப் பாருங்கள். இன்றுள்ள உலகில் அறிவில் சிறந்த வர்களைப் பாருங்கள். அவர்களைப் பாருங்கள். “பெண் வாத்தில் கிடைக்கும் சமையற்குழம்பு தான் ஆண்வாத்திலும் கிடைக்கும்” என்னும் ஒரு பழைய பழமொழி உண்டு. 102 நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு, எது சரி மற்றும் தவறு என்று பகுத்தறிந்து, எது சரி மற்றும் தவறு என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். 103 இப்பொழுது, அவர்களுக்கிருந்த இந்த கல்வாரியிலிருந்து, ஜனங்களுக்காக ஜீவத் தண்ணீர் பாய்ந்ததை நாம் கண்டறிகிறோம். 104 இப்பொழுது, சில ஜனங்கள் தங்களுடைய இருதயங்களிலும் மற்றும் சிந்தனையிலும், இஸ்ரவேலர் யாவரும் தண்ணீரைக் குடித்து, பிறகு ஒட்டகங்களின் மேல் சுமையேற்றி, தங்களுடைய குதிரைகளில் சேணம், போன்ற வற்றைக் கட்டி, தண்ணீரைப் பாய்ச்சின அந்த கன்மலையை அங்கேயே விட்டுவிட்டு, தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்துக்கு பிரயாணம் செய்ததாக சிலர் நினைக்கின்றனர். அது தவறு. 105 அந்தக் கன்மலை அவர்களோடு கூட சென்றது, அந்த தண்ணீர் அவர்களோடு கூட சென்றது. இப்பொழுது முதலாம் கொரிந்தியர், 10-ம் அதிகாரம், 11-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் அதில் “அந்தக் கன்மலை இஸ்ரவேலரோடு கூடச் சென்றது” என்பதைக் காணலாம். அன்றிலிருந்து அவர்கள் எங்கு சென்றாலும், அந்தக் கன்மலை அவர்களோடு கூட சென்றது, தண்ணீரும் அவர்களைப் பின்தொடர்ந்தது. 106 என்ன ஒரு அழகான மாதிரி, மேலும் இன்று விசுவாசிக்கான ஒரு—ஒரு அழகான பிடிப்பும் நங்கூரமுமாய் உள்ளது, அதாவது ஒருதரம் அடிக்கப்பட்ட அந்தக் கன்மலை, ஒருமுறை கல்வாரியிலிருந்து ஊற்றப்பட்ட தண்ணீர், நாங்கள் எங்கிருந்தாலும் எங்களுடன் செல்கின்றது என்பதை அறிந்திருந்தனர். ஓ, என்னே! அது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டு, “பாருங்கள், நேற்றுக்கு முந்தின நாள் நமக்கு அங்கே, தண்ணீர் கிடைத்தது” என்று கூறுவதல்ல. இன்றைக்கும் நாம் இங்கேயே, தண்ணீரைப் பெற்றுள்ளோம், ஏனெனில் அந்தக் கன்மலை கிறிஸ்துவே! கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். 107 பாருங்கள், அந்தக் கன்மலை இஸ்ரவேலரோடே கூடச் சென்றது. அவர்கள் அந்தக் கன்மலையைப் பின்தொடரவில்லை, ஆனால் அந்த கன்மலை அவர்களைப் பின் தொடர்ந்தது. ஆமென். இஸ்ரவேல் தங்களுடைய பிரயாணத்தை மேற்கொண்டனர். அவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று, அதாவது, நேர்ப்பாதையில் சென்று, நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய வேண்டும். மேலும் கன்மலையும் தண்ணீரும் அவர்களைப் பின்தொடர்ந்தது. …அந்தக் கன்மலை அவர்களோடே செல்லுதல்:… முதலாம் கொரிந்தியர் உங்களுக்கு அவ்வண்ணமாய்ச் சொல்லுகிறது, 10-ம் அதிகாரம். சரி. …அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 108 தேவன் ஜனங்களின் நியாயத்தீர்ப்புகளை எடுத்து, அவைகளை கிறிஸ்துவின் மேல் வைத்து, அவரை அடித்தார். அப்பொழுதிலிருந்து அந்தக் கன்மலையில் ஒரு பிளவு இருந்ததை, நீங்கள் கவனித்தீர்களா? அங்கே மோசே அடித்த, அதில் ஒரு பிளவு ஏற்பட்டிருந்தது. அவ்வாறே அவர் அடிக்கப்பட்ட போது, கிறிஸ்து ஒரு பிளவை உடையவராயிருந்தார், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” அந்த ஜீவனிலிருந்து, இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜீவத்தண்ணீர்கள் புறப்பட்டு வந்தன! 109 இப்பொழுது, இந்த ஜீவனை நாம் பெறவேண்டுமானால், கிறிஸ்துவின் ஜீவன் சபையோடு தங்கியுள்ளதை, ஞாபகம்கொள்ளுங்கள். அல்லேலுயா! ஓ, அடுத்த பத்து நிமிடங்களுக்கு நம்முடைய சிந்தனைகளை அங்கே நங்கூரமிட முடிந்தால் நலமாயிருக்கும்! கிறிஸ்து சபையைவிட்டு விலகுவதில்லை. “உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” அது ஜனங்கள்தான் கிறிஸ்துவை விட்டு விலகிச் செல்கிறதாயுள்ளது, கிறிஸ்து ஜனங்களை விட்டு விலகுவதில்லை. ஜனங்கள் தங்கள் அவிசுவாசத்தின் காரணமாக, அதை விட்டுவிடுகின்றனர். அவர்கள் கிறிஸ்துவை விட்டு விடுகின்றனர், கிறிஸ்து ஜனங்களை விட்டு விலகுவதில்லை. 110 இஸ்ரவேல் ஜனங்கள் நீரோடையை விட்டுச் சென்றனர், நீரோடை இஸ்ரவேல் ஜனங்களை விட்டுச் செல்லவில்லை. புரிகிறதா? ஏனென்றால், வேதம், “கன்மலையும் தண்ணீரும் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்தன” என்று தெளிவாககக் கூறுகிறது. அவர்களைப் பின்தொடர்ந்ததே! அவர்கள் எங்கு சென்றாலும், அதுவும் கூட, சென்றது. 111 ஓ, இந்தக் காலை, நமக்கு நேரமிருந்தால், யோசுவாவின் முதலாம் அதிகாரத்துக்கு, நான் திருப்ப விரும்புகிறேன், அங்கே அவர், “உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். எந்த மனிதனுக்கும் பயப்படாதே. திடமனதாயிரு! உன் காலடி மிதிக்கும் இடம் எதுவாயிருப்பினும் பரவாயில்லை, அங்கு நான் உன்னோடே கூட இருப்பேன்” என்றார். தேவன் யோசுவாவுடன் செல்லுதல்! 112 அதே தேவன் இந்தக் காலையில் தம்முடைய சபையுடன் கூட செல்கிறார். அப்பாலுள்ள இந்த ஊற்றிலிருந்தும் நாம் குடிப்போமாக. நீங்கள் எங்கு காலடி வைத்தாலும், உங்களுக்குத் தண்ணீர் கொடுத்து ஜீவனையளிக்க, தேவன் அங்கு உங்களோடிருப்பார். “காலத்தின் முடிவுபரியந்தம், நான் உங்களுடனே கூட எப்போதும் இருப்பேன்.” கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனுடைய பிரமாணங்கள். 113 இப்பொழுது நீங்கள், “அப்படியானால், சகோதரன் பிரான்ஹாமே, நாம் செய்யவேண்டிய காரியங்களை நாம் ஏன் செய்வதில்லை? நமது வரங்களும் சபையிலுள்ள மற்றவைகளும், ஏன் அவை இருக்க வேண்டிய நிலையில் இல்லை? ஏன் நமது சபை தான் இருக்க வேண்டிய ஸ்தானத்துக்கு தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை?” என்று கேட்கலாம். ஜனங்கள், சோதனை நேரத்தில், இஸ்ரவேலர் செய்ததுபோல பின்வாங்கிப்போகின்றனர். தேவன் அவர்களை கைவிட்டுவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். 114 ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், கன்மலை இஸ்ரவேலரை ஒருபோதும் விடவேயில்லை. இஸ்ரவேலரோ கன்மலையை விட்டுவிட்டனர், கன்மலை எல்லா நேரத்திலும் அவர்களோடு கூட உள்ளது என்பதைக் குறித்து அவர்கள் மறந்துவிட்டனர். அது அங்கேயே இருந்தது, பாதையில் முடிவு வரை அது அவர்களுடன் சென்றது. “அது அவர்களைப் பின் தொடர்ந்தது.” அது பேசும் தூரத்தில் தான் இருந்தது. அது கேட்கும் தூரத்தில் தான் இருந்தது. அல்லது, அது காணும் தூரத்துக்கும் அப்பால் இல்லை. 115 கிறிஸ்துவும் அப்பால் இல்லை! இன்றைக்கு சபையோடு, அவர் பேசும் தூரத்துக்கு அப்பால் இல்லை. உங்களில் சிலர் பின் வாங்கிப் போய், தவறான காரியங்களைச் செய்து, நீங்கள் சந்தோஷத்தை இழத்திருக்கிறீர்கள், உங்களுடைய தண்ணீர் உலர்ந்துவிட்டது. அவர் இன்னும் உங்களிடமிருந்து பேசும் தூரத்தில் தான் இருக்கிறார். அவர் உங்களைப் பின் தொடருகிறார். நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் அறிவார். அவர் காட்சியில் வர நீங்கள் அவரை அழைக்க வேண்டுமென்று அவர் வாஞ்சித்துக்கொண்டிருக்கிறார். 116 இன்றைக்கு இந்த மகத்தான பெந்தெகொஸ்தே அசைவு, நீங்கள் அவரை காட்சிக்கு அழைக்க வேண்டுமென்று தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவருடன் பேசும் தூரத்தில் தான் இருக்கிறீர்கள். நாம் தவறு செய்து, பாவம் செய்து, புறமுதுகை அவருக்கு காட்டி, மேலும்—மேலும் செய்யக் கூடாத காரியங்களைச் செய்திருந்தபோதிலும், அவர் இன்னும் நம்முடன் இருக்கிறார். அவர் நம்முடன் கூட இருப்பதாக கிறிஸ்து வாக்களித்துள்ளார். 117 வேதம், “தண்ணீர் இஸ்ரவேல் புத்திரரை பின்தொடர்ந்தது” என்று உரைத்துள்ளது. அவர்களுக்கு தாகம் ஏற்பட்டபோது, தண்ணீர் அருகாமையிலுள்ளதை அவர்கள் அறிந்திருந்தனர். 118 இப்பொழுது, இந்தக் காரியங்கள் பிரமாணங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய அமைப்பு அனைத்துமே விதிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் எடுத்துக்கொள்ள…நாம் ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்வோமாக. 119 பூமியை நாம் எடுத்துக்கொள்வோம். அது இருபத்து நான்கு மணிக்கு ஒரு முறை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வருகிறது, மிகவும் சரியானது, அதாவது…சரியான நேரத்தை காண்பிக்கக்கூடிய, ஒரு கடிகாரத்தை நம்முடைய எல்லா விஞ்ஞானத்தைக் கொண்டும் ஒருபோதும் நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும், அவர்கள் உருவாக்கும் சிறந்த கடிகாரங்களும் கூட, ஒரு ஆண்டில், எத்தனையோ நிமிடங்கள் முன்னோக்கி அதிகமாக அல்லது பின்னோக்கி இயங்குகின்றன. ஆனால் பூமியோ ஒருபோதும் ஒரு வினாடியும் தவறாமல் செயல்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகளும், வான மண்டல நிபுணர்களும் உங்களுக்கு, இப்பொழுதிலிருந்து இருபது அல்லது இப்பொழுதிலிருந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, சூரியனும் சந்திரனும் ஒன்றையொன்று கடக்கும் என்று சொல்லுமளவிற்கு அது அவ்வளவு பரிபூரணமாயிருக்கிறது. அது அதன் இருபத்து நான்கு மணி நேர சுற்றுபாதையில் திரும்பும்போது, மற்றும் அது அதனுடைய நேரத்தில் ஒரு பருவத்திற்கான வட்டப் பாதையில் சுற்றுகிறபோது, அது ஒரு வினாடியும்கூட இழப்பதில்லை. அல்லேலுயா! அது தேவனுடைய விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறபடியால், அது பரிபூரணமாயிருக்கிறது. 120 அந்த அலை எப்பொழுது வெளியே எழும்பிச் செல்லும் என்ற, அந்த ஒரு நிமிடத்தையும் அவர்கள் அறிந்துள்ளனர், ஏனெனில் சந்திரன் எந்த நேரத்தில் மறைகிறது என்று அவர்களுக்குத் தெரியும். தேவன் எல்லாவற்றையும் தமது விதிகளினால் ஒழுங்குக்குள் கொண்டு வந்துள்ளார். சந்திரன் மறையும்போது, அலைகள் அதனோடு மறைகின்றன. சந்திரன் மேலே எழும்பும்போது, இங்கே அலைகளும் அதனுடன் தோன்றுகின்றன. சந்திரன் எப்பொழுது மறையும் என்றும், அந்த நேரமும் அவர்களுக்குத் தெரியும். அதை அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்க நாட்காட்டியில் எழுதி வைத்து, ஒரு நிமிடம் கூட பிசகாமல், அலைககள் எப்பொழுது தாழும் என்று, உங்களுக்குக் கூற முடியும். நிச்சயமாக, ஏனெனில் அந்தவிதமாகத்தான் சந்திரன் மறைகிறது, ஏனெனில் அது தேவனுடைய விதியின்படி அமைந்துள்ளது. 121 அன்றொரு நாள், மிச்சிகன் ஏரிக்கரையில், நான் நின்று கொண்டிருந்தேன். கனடாவுக்குப் போகும் வழியில் தான், நான் சுப்பீரியர் ஏரிக்குச் சென்றேன், அது ஏரளான தண்ணீரைக் கொண்டது. அங்கு நான் நின்றுகொண்டு, “இது இங்கே இந்த பெரிய நீரளவின் குறுக்கே எத்தனை மைல்கள் உள்ளன!” என்று நான் எண்ணினேன். அதன்பின்னர் நான் மிஷி-…இல்லை சுப்பீரியர் ஏரியைக் கடந்து, நான் மிச்சிகன் ஏரிக்கு வந்தபோது, அதிலும் ஏறக்குறைய திரளான தண்ணீர் இருந்தது. மேலும் அங்கு, சுப்பீரியர் ஏரியிலிருந்து மிச்சிகன் ஏரி வரை, மிச்சிகன் ஏரியிலிருந்து ஒண்டாரியோ ஏரி வரை, மேலும் வெறும்…ஹுரான், மற்றும் அனைத்து ஏரிகளும் ஒன்றாக உள்ளன. அந்த ஏரிக்குள் எத்தனை கோடிக் கணக்கான மடங்கு, எண்ணற்ற பீப்பாய்களின் புதிய தண்ணீர் இருக்கும்! 122 மேலும் நெவாடாவில், அரிசோனாவில், நியூ மெக்ஸிகோவில், கிழக்கு கலிபோர்னியாவில், கோடிக்கணக்கான ஏக்கர்கள் பரப்புள்ள, வறண்டநிலம் உள்ளது. அந்த தண்ணீர் மாத்திரம் அந்த நிலத்தில் பாய்ச்சப்பட்டால், அது மிக வளமானதாயிருக்கும், இந்த தேசம் உலகம் முழுவதற்கும் ஆகாரம் அளித்து, பசியுள்ள மக்களே இல்லாமல், மேலும் உபரியை கடலில் கொட்டக்கூடிய அளவிற்கு இருக்கும். அது சரி! கோடிக்கணக்கான நிலப்பரப்பில் கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள உருளை கிழங்குகள், பீன்ஸ், முட்டைகோஸ், கீரை வகைகள், முள்ளங்கி, வெளிறிய தண்டுச் செடி, வெள்ளரிகள் இன்னும் என்னவெல்லாமோ வளரும். அந்த நிலத்தில் வளரும், அது—அது தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. 123 இதோ தண்ணீர் இங்கே உள்ளது, இதோ இங்கு நிலம் உள்ளது. இப்பொழுது நாம் அதைப் பார்க்க முடியும், அது அதைச் செய்யும் என்று நமக்குத் தெரியும், ஏனென்றால் நாம் தண்ணீரைச் சோதித்து, அது மாசுபடாமலிருப்பதைக் காணலாம், மேலும் மண்ணை சோதித்து, அது வளமாக இருப்பதைக் காணலாம். இப்பொழுது, நம்மால் விரும்பி செய்ய முடிந்ததை எல்லாம் செய்தாலும், இவையிரண்டையும் ஒருபோதும் ஒன்றாக சேர்க்க முடியாது. ஆனால், ஒரு விதி உண்டு, அதுதான் ஈர்ப்பு விதியாகும். இப்பொழுது, நாம் புவிஈர்ப்புக்கு ஏற்றபடி வேலை செய்தால், நாம் அந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தண்ணீரைப் பாய்ச்ச முடியும், ஏரிகளிலிருந்து தண்ணீரை எடுத்து அதற்கு நீர் பாய்ச்சலாம். ஆனால் நாம் ஈர்ப்பு விதிக்கேற்றபடி பணி புரிய வேண்டும். நாம் அங்கே அதை விரும்பினால் மாத்திரம் போதாது. நாம் அங்கே அதற்கு சத்தமிட முடியாது. நாம் அதற்கு அங்கே கூச்சலிட முடியாது. அங்கே அதைப் பெற்றுக் கொள்ள, அந்த புவியீர்ப்பு விதிகளுக்கேற்றபடி நாம் பணி புரிய வேண்டும். தேவன் எல்லா வற்றையும் விதியில் வைத்திருக்கிறார். 124 இங்கே, நான் யோசித்துக் கொண்டிருந்தேன், இதை ஏற்கனவே நான் உங்களிடம் கூறினேனோ, அல்லது இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு, நான் அணில் வேட்டைக்கு, சகோதரன் உட்டுடன் கென்டக்கியில் இருந்தேன். மேலும் நாங்கள்…அங்கு அணில்கள் இருப்பது அபூர்வமாயிருந்தது, எனவே வேட்டையைப் பற்றி விசாரிக்க நாங்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஒரு மனிதன் பல ஏக்கர் நிலங்களை உடையவராயிருந்தார், மேலும் இந்த நிலம் அதிக காடுகளைக் கொண்டதாயிருந்தது. ஆனால் சகோதரன் உட் என்னிடம், “அந்த மனிதர் ஒரு நாத்திகன். அவர்—அவர் ஒரு அவிசுவாசி” என்று கூறினார். எனவே அவர் இவரை அறிந்திருந்ததாகக் கூறினார், எனவே அவர்…இல்லை அவருடைய தந்தை அவரை அறிந்திருந்தார். எங்களுக்கு வேட்டையாடச் செல்ல அனுமதி கிடைக்குமா என்று கேட்க அவர் அங்கு சென்றார். 125 நாங்கள் அந்த மனிதர்களின் இடத்திற்கு காரோட்டிச் சென்றோம். அவரும் வேறொரு மனிதனும், அவர்களிருவரும் தங்களுடைய எழுபதாவது வயதினை தாண்டியவர்களாயிருந்தனர், அவர்கள் ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்தனர். திரு. உட் இந்த மனிதனிடத்தில் சென்றார், இவர் அவரிடத்தில், “நான் உங்களுடைய இடத்தில் சற்று வேட்டையாட முடியமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நல்லது,” என்று கூறிவிட்டு, “சரி” என்று கூறினார். அப்பொழுது அவர், “நீர் எந்த உட்? நீர் ஜிம் உட்டினுடைய பையனா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் தான்” என்றார். 126 மேலும் அவர், “பாருங்கள், வயோதிக ஜிம் நேர்மையானவராய், அவ்விதமாயிருந்தார்” என்றார். அவர், “நீ எங்கு வேண்டுமானாலும், என் இடத்தில் வேட்டையாடலாம். இங்கு எனக்கு நாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன, நீங்களாகவே இடத்தை தெரிந்து கொள்ளுங்கள். நீ எங்கு வேண்டுமானலும், அந்தப் பள்ளத்தாக்குகளுக்குள் செல். உன் நிலத்தைப் போல் பாவித்துக்கொள்” என்றார். 127 நான் காரில் அமர்ந்திருந்தேன், ஏனென்றால் போதகரும் நாத்திகனும் நன்கு ஒருமித்துப் போகமாட்டார்கள், நாங்கள் ஒரு நாத்திகனின் ஆதரவைக் கேட்கப்போவதாயுள்ளோமே என்று நான் எண்ணினேன். 128 எனவே அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து, சகோதரன் உட், “பாருங்கள், இப்பொழுது, என் போதகரையும் என்னோடு நான் அழைத்துக் கொள்ளலாமா? அவரும் கூட வருவதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்று நான் நினைக்கிறேன்” என்றார். 129 இந்த வயோதிகர் தன்னுடைய பிரம்பை பிடித்தவாறேத் திரும்பி, அவர், “உட், நீ எங்கு சென்றாலும், உன்னோடு ஒரு போதகரைக் கூட்டிச் செல்லும் அளவிற்கு நீ மிகவும் தாழ்ந்துவிட்டாய் என்று நீ என்னிடத்தில் பொருட்படுத்திக் கூறுகிறாயா?” என்று கேட்டார். 130 எனவே, அதன் பின்னர், நான் காரிலிருந்து இறங்கிச் செல்வது மேலானது என்று, நான் நினைத்தேன். எனவே நான் காரிலிருந்து இறங்கி, சில நிமிடங்கள் இந்த பெருந்தன்மையான வயோதிகருடன் பேசினேன். அவர் உடனே போதகர்களால் அவருக்கு அதிக உபயோகமில்லையென்பதை எனக்குத் தெரிவித்தார், ஏனெனில் அவர்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக அவர் எண்ணினார். 131 அவர், “அவர்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் அலப்புகின்றனர். பாருங்கள்,” என்று கூறி, மேலும் அவர், “ஒரு மனிதன் என்னுடன் பேசம்போது, அவன் எதைக் குறித்து பேசுகிறானோ அதை அறிந்திருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்றார். இப்பொழுது, அது நல்ல ஒரு உணர்வு. அது நல்ல உணர்வு. அவர், “இப்பொழுது, ஒரு மனிதன் என்னிடம் பேசினால், அவன் எதையாவது பேசுவதை, மற்றொன்று, அவருக்குத் தெரியாத ஒன்றை யூகித்து என்னிடம் பேசுவதை நான் விரும்பவில்லை. அவர் உறுதியாய் அறிந்துள்ளதையே என்னிடம் பேசவேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்றார். பாருங்கள், நான் அதை கனப்படுத்தினேன். நான் அந்த வயோதிக மனிதனிடத்தில் அதை மதித்தேன். 132 ஆகையால் நான், “பாருங்கள், நிச்சயமாக, ஒவ்வொரு நபருக்கும் தன்னுடைய சொந்த கருத்துண்டு” என்றேன். 133 அவர் தொடர்ந்து, “சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தேசத்தில் இங்கே ஒரு போதகர், ஆக்டனில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தார்” என்றார். மேலும், “இந்த தேசத்திற்கு அந்நியராயிருந்த, அந்த பிரசங்கியார், ஒரு இரவு, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு—ஒரு பெண்ணை நோக்கி, ‘உன் சட்டைப் பையில் ஒரு கைகுட்டை உள்ளது. நீ திருமதி இன்னார்-மற்றும்-இன்னார். மேலும் இங்குள்ள மலையின் மேல் வியாதிப்பட்டிருக்கிற ஒரு சகோதரி உனக்கிருக்கிறாள். அவளுடைய பெயர் இன்னார்-மற்றும-இன்னார். அவள் வயிற்றிலுள்ள புற்று நோயால் மரித்துக் கொண்டிருக்கிறாள்.’ ‘இந்த கைகுட்டையை எடுத்துக்கொண்டு போய் அதை உன் சகோதரியின் மேல் வைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ மரிக்காமல், உயிர்வாழப் போகின்றாய்”’” என்று அவளிடம் சொல் என்று கூறினார். 134 மேலும் அவர், “இந்த அதே ஸ்திரீ எங்களுடைய ஒரு சிநேகிதியாயிருந்தாள்” என்றார். அவர் தொடர்ந்து, “நாங்கள் இந்தப் பெண்ணை எடுத்து…இந்தக் கைக்குட்டையை; இல்லை இந்த மனிதன், அந்த நபருக்கு” என்றார். முதலில் அவர், “இந்த ஸ்திரீ, என் மனைவியும் நானும் அந்தக் காலையில் அங்கேயே இருந்து, எழுந்திருந்து, இந்த ஸ்திரீக்காக காத்திருந்தோம். அவள் மிகவும் மோசமாக இருந்தாள்! நீண்ட காலமாகவே, மருத்துவர்கள் அவளை கைவிட்டிருந்தனர். அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவள் கழிவுகளை கழிக்க அவளை ஒரு போர்வையில் வைத்து, தூக்கி உட்கார வைத்தோம். மறுபடியும் அவளை அந்த போர்வையில் கிடத்த வேண்டியதாயிருந்தது, அவள் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தாள்” என்றார். மேலும் அவர், “ஒரு இரவு, அங்கே, யாரோ மரித்துவிட்டார்கள் என்பது போன்ற ஒரு சத்தம் வந்தது” என்றார். 135 அதாவது அங்கே இருந்த பென் என்பவரே, அந்த கைகுட்டையை, அதை அங்கு கொண்டு சென்றார். பென், அது நீங்கள் தான் என்று நான் நினைக்கிறேன், அப்படித்தானே? [சகோதரன் பென், “ஆமென். ஆமென்” என்கிறார்—ஆசி.] சகோதரன் பென் அங்கே இருந்தார், அந்தக் கைகுட்டையை அவள் பெற்றுக்கொண்டாள், ஏனெனில் அவர் அந்த ஸ்திரீயைக் அங்கே அழைத்து வந்திருந்தார். 136 அவர் தொடர்ந்து, “அடுத்த நாள் காலை, அவள் ஆப்பிள் பழ பணியாரத்தை புசித்துக்கொண்டிருந்தாள்” என்றாள். மேலும், “அவள் தன் சொந்த வேலையை மாத்திரம் செய்வதுமல்லாமல், அடுத்த வீட்டாரின் வேலையையும் செய்கிறாள். அவள் மிக நன்றாக இருந்தாள்!” என்றார். அவர் தொடர்ந்து, “இப்பொழுது நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். தான் என்ன பேசுகிறார் என்பதை அறிந்துள்ள அந்த போதகரை நான் காண நேரிட்டால்,” என்று கூறி, “அவருடன் பேச எனக்கு—எனக்கு விருப்பமுண்டு” என்றார். 137 சகோதரன் உட் என்னைப் பார்த்தார், நான் அவரைப் பார்த்தேன். காட்டில் முகாமிட்டிருந்ததால், நான் அழுக்காய், வியர்வை மற்றும் அழுக்கோடு நின்று கொண்டிருந்தேன், மேலும்—மேலும் அணில் இரத்தம் எங்கள் மேல் படிந்திருந்தது. எனவே நான், “பாருங்கள்,” என்று கூறி, நான் தொடர்ந்து, “…நீங்கள் இந்த நபரிடத்தில் பேசினால், அவர் அதை எப்படி செய்தார் என்று உங்களிடம் சொல்வார் என்று நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்டேன். அவர், “ஆம், ஐயா, அதைத்தான் நான் பொருட்படுத்துகிறேன்” என்றார். நான், “சரி, அது—அது ஒரு நல்ல காரியம்” என்றேன். 138 அவருடைய ஆப்பிள் பழங்களில் ஒன்றை நான் புசித்துக்கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரியும், ஆகஸ்டு மாதத்தில், இலயுதிர் காலமாதலால், சிறிய மஞ்சள் நிற மலைக் குளவிகள் அவைகளை தின்றுகொண்டிருந்தன. எனவே நான் எடுத்திருந்த இந்த சிறு ஆப்பிளை, நான் புசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “இது ஒரு மிக நல்ல ஆப்பிளாயுள்ளதே” என்றேன். மேலும் நான், “அந்த மரம் அங்கே எவ்வளவு காலமாக உள்ளது?” என்று கேட்டேன். 139 “ஓ,” அவர், “நான் இந்த மரத்தை அங்கே, முப்பது அல்லது நாற்பது அல்லது சற்று அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு நட்டேன்” என்று கூறினார். 140 “சரி, ஐயா.” நான், “உங்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். நான், “இந்த உலகில் எப்படி…அந்த ஆப்பிள்கள் மரத்திலிருந்து விழுவதையும், அதனுடைய இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதையும் நான் காண்கிறேன், இங்கே இதுவோ ஆகஸ்டு மாதத்தின் பாதி மாத்திரமே கடந்ததாயுள்ளது” என்றேன். மேலும் நான், “நமக்கு இன்னும் குளிர் காலம் கூட வரவில்லை, நமக்கு இன்னும் மூடுபனியோ அல்லது மற்றெதுவும் பெய்யவில்லை, அதே சமயத்தில் இலைகள் அந்த மரத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அது ஏன்?” என்றேன். அதற்கு அவர், “சத்து மரத்தை விட்டு சென்றுவிட்டது” என்றார். “ஓ,” நான், “அது எங்கு சென்றது?” என்றேன். அவர், “வேர்களுக்குள் சென்றுவிட்டது” என்றார். நானோ, “அப்பொழுது அது எவ்வளவு காலம் அங்கே தங்கியிருக்கும்?” என்றேன். அவரோ, “வசந்த காலம் வரைக்கும்” என்றார். 141 மேலும் நான், “அதன்பின்னரே அது மறுபடியும் மேலே வந்து, ஒரு நிழலுக்கான புதிய இலைகளையும், புசிப்பதற்கு புதிய ஆப்பிள்களையும் உங்களுக்கு கொண்டு வரும்” என்றேன். அதற்கு அவர், “அது உண்மை. முற்றிலும் சரியே” என்றார். 142 அப்பொழுது நான், “பாருங்கள், ஐயா, அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே அறியாத இந்த நபர்களைக் குறித்து நீர் பேசுகிறீர்” என்றேன். மேலும் நான், “சத்தை அந்த மரத்தை விட்டுப் போகச் செய்வது எந்த ஞானம் என்று எனக்கு நீர் விவரிக்க முடியுமா? குளிர் காலத்தின்போது அது மரத்தில் தங்கியிருந்தால், மரம் மரித்துப் போய்விடும். நீர் அந்த மரத்தை கொன்று விடுவீர். ஜீவனின் கருஉயிர்மம் அந்த சத்தில் தான் உள்ளது” என்றேன். எனவே நான், “அது மரத்தைக் கொல்லும்” என்றேன். “எந்த ஞானம் அந்த சத்தை அந்த மரத்தை விட்டு, வேர்களுக்குள் போகும்படி செய்து, வசந்த காலம் வரைக்கும் அங்கு தங்கியிருக்கும்படி செய்து, அதன்பின்னர் மீண்டும் அதை மேலே கொண்டு வந்து சில ஆப்பிள் பழங்களை ஈனும்படி செய்கிறது?” என்று கேட்டேன். அதன்பின்னர் நான், “ஒரு வாளியில் தண்ணீர் நிறைத்து, அதில் ஒரு கம்பினை நட்டு வைத்து, ஆகஸ்டில், அது கம்பின் கீழ் பாகத்திற்குச் சென்று, வசந்த காலத்தில் மேலே வருகிறதா என்று பாருங்கள். புரிகிறதா?” என்றேன். மேலும் நான், “ஒரு விதி உண்டு, அது இயற்கையின் விதி. ஏதோ ஒரு ஞானம் இந்த விதிப்படி இயக்கச் செய்கிறது. அது மாத்திரம் அல்ல, ஆனால் அந்த ஞானம் அந்த விதியின்படி இயக்கி, சத்தை அந்த மரத்தின் வேருக்குக் கொண்டு சென்று, மீண்டும் கொண்டு வருகிறது” என்றேன். அதற்கு அவர், “அதைக் குறித்து நான் இதுவரை நினைக்கவேயில்லை” என்றார். 143 நான், “உங்களால் முடிந்தால்…சத்தை அந்த மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களுக்குக் கொண்டு சென்று, மீண்டும் அதை மரத்துக்கே கொண்டு வரும் அந்த ஞானத்தை நீங்கள் எப்போதாவது கண்டறியக் கூடுமானால், அதே ஞானம் தான் அன்றிரவு, ‘போய், அந்தக் கைக்குட்டையை அந்த ஸ்திரீயின் மேல் வை’ என்று என்னிடம் கூறும்படி சொன்னது” என்றேன். அப்பொழுது அவர், “நீங்கள் தான் அந்த பிரசங்கியாரா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஐயா, அது சரியே” என்றேன். 144 சென்ற ஆண்டு நான் அங்கு சென்றிருந்தேன் (அவர் இறந்து விட்டார்), விதவையாகிய அவருடைய மனைவி அதே முன் தாழ்வாரத்தில் அதே மரத்திலிருந்த ஆப்பிள் பழங்களை உரித்துக் கொண்டிருந்தார். சகோதரனே…முதலில் நாங்கள் யாரென்று அறியாமல், எங்களை அங்கிருந்து விரட்டப்போவதாயிருந்தார்கள். நான் சென்று அவளிடம் இதைக் குறித்து கூறி, நாங்கள் அவரிடமிருந்து அனுமதி பெற்றிருப்பதாகக் கூறினேன். மேலும் இதைக் குறித்து கூறிவிட்டு, “அவர் மரிக்கும் முன்பு, கிறிஸ்துவை முழுவதுமாக அறிக்கையிட்டு அவரை ஏற்றுக்கொண்டார்” என்றாள். 145 நீங்கள் பாருங்கள், அந்த மரம் என்ன செய்கிறது, எந்த ஞானம் சத்தை மரத்திலிருந்து கீழே இறங்கச் செய்கிறது? அது ஒரு விதி. அது தேவன் ஒழுங்குபடுத்தியுள்ள ஒரு விதியாயுள்ளது. அந்த விதி அந்த சிருஷ்டியை பாதுகாக்கும் தேவனுடைய விதியாக உள்ளது. ஆமென். 146 உங்களுக்குத் தெரியும், நீங்கள் எவ்வளவுதான் கூக்குரலிட்டு, இப்பொழுது, “இந்தக் கோடைகாலத்தில் சூரியன் ஒருக்காலும் பிரகாசிக்கப் போவதில்லை, அது பிரகாசிக்கப் போவதில்லை” என்று கூறினாலும்—கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அது எப்படியும் பிரகாசிக்கும். நீங்கள் எவ்வளவுதான், “நான்—நான்—நான் இரவு நேரம் வர அனுமதிக்கமாட்டேன்” என்று நீங்கள் கூறினாலும், எப்படியும், அது வரும். ஏனெனில் உலகம் என்றழைக் கப்படும், நாம் வாழும் இந்த இடம், ஒரு தேவனுடைய விதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. 147 இப்பொழுது, சகோதரரே, சகோதரிகளே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஆகையால், நாம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்திருப்போமானால்…தேவனுக்கு சிறிய பலவீனமான பாகங்கள் மற்றும் பெரிய பலமுள்ள பாகங்கள் என்று கிடையாது. அவர் முழுவதும் தேவனாயிருக்கிறாரே! நீங்கள் போதிய அளவுக்கு தேவனை உங்களுக்குள் பெற்றிருப்பீர்களானால், அது மிகச் சிறிய அளவாயிருந்தாலும் கூட, ஒரு புதிய பூமியை படைப்பதற்கு அது போதிய வல்லமையாய் உள்ளது. ஒரு புது சந்திரனையும் மற்றும் ஒரு புது முறைமையையும் படைப்பதற்கு அது போதிய வல்லமையுள்ளதாய் இருக்கும். அது தேவன், அது வலிமையானதாயுள்ளதே! இப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் நித்திய ஜீவளைப் பெற்றுள்ளனர், அது, தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருப்பதாகும்; மரித்தோரை உயிரோடெழுப்பவும், பிணியாளிகளை சுகப்படுத்தவும், சுற்றுப்பாதையில் கிரகங்களை அமைக்கவும் அது போதிய வல்லமையுள்ளதாய் விளங்குகின்றது. ஆனால் உங்களையும், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி, ஒரு விதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்குள் பெற்றுள்ள அதே ஆவி, உயிர்த்தெழுதலின் நாளில் உங்களை உயிரோடெழுப்பும். 148 இயேசு, அவர் இங்கே பூமியின் மேல் இருந்தபோது, அவர் மரித்தபோது, அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குச் சென்று, “காவலிலுள்ள ஆவிகளுக்கு, நோவாவின் நீடிய பொறுமையின் நாட்களில் மனந்திரும்பாத, காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு, பிரசங்கம் செய்தது.” அவருடைய சரீரம் கல்லறைக்குச் சென்றது. ஆனால் அவர் மரிக்கும் முன்பு, அவர் தம்முடைய ஆவியை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தார். அவருடைய ஆவி தேவனிடத்திற்குச் சென்றது; அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குச் சென்றது; அவருடைய சரீரம் கல்லறைக்குச் சென்றது. வேதவாக்கியம் நிறைவேறும் வரைக்கும் இயேசு உயிரோடெழாதபடி தடை செய்யப்பட்டார். அவர் உயிரோடெழ முடியவில்லை, ஏனெனில் அவருடைய சரீரம் இரவும் பகலும் மூன்று நாட்களாக கல்லறையில் இருக்க வேண்டியியதாயிருந்தது. ஆனால் வேதவாக்கியம் நிறைவேற்றப்பட்டபோது, இந்த தடை நீக்கப்பட்டது; அவருடைய ஆவி அவருடைய ஆத்துமாவுக்குள் இறங்கி, அவருடைய ஆத்துமா அவருடைய சரீரத்துக்குள் இறங்கினது, அவர் உயிர்த்தெழுந்தார். 149 நாம் மரிக்கும்போது, நமது ஆத்துமாக்கள் தேவனுடைய பலி பீடத்தின் கீழ் செல்லும்; சில காலைகளுக்கு முன்பு, உங்களுக்கு தெரிந்துள்ளபடி, தரிசனத்தில், வேதம் கூறுகிற அந்த இடத்தை காணும்படியான சிலாக்கியத்தை நான் பெற்றேன். “நம்முடைய ஆவிகள் அதைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்பி, நமது சரிரங்கள் பூமியின் மண்ணுக்குத் திரும்பும்.” ஆனால் ஒரு நாள் வேதவாக்கியம் நிறைவேற்றப்படும்போது, நமது ஆவிகள் தேவனிடமிருந்து விடுவிக்கப்பட்டு, ஆத்துமாவுடன் ஒன்று சேர்ந்து, ஆத்துமா சரீரத்துக்குள் நுழையும். நம்மை உயிரோடெழுப்பக்கூடிய வல்லமை, இப்பொழுதே நமக்குள் உள்ளதே! இப்பொழுது நாம் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம். நாம் இப்பொழுது உயிர்த்தெழுதலின் வல்லமையில் இருக்கிறோம். 150 அதற்கென்று ஒரு விதி இல்லாமலிருந்திருந்தால், தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் தங்களுக்கென இங்கு ஒரு உலகைப் படைத்துக்கொண்டு, அதில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்துவர். அதைச் செய்வதற்கு நீங்கள் உங்களுக்குள் வல்லமையைப் பெற்றுள்ளீர்கள். தேவனுடைய வல்லமையின் நிழலை நீங்கள் உங்களுக்குள் பெற்றிருந்தால், அதைச் செய்ய நீங்கள் வல்லமையைப் பெற்றுவிட்டீர்கள். தேவன் சர்வ வல்லவராய் இருக்கிறார். நான் என்ன பொருட்படுத்துகிறேன் என்று புரிகிறதா? உங்களுக்குள் இருக்கும் வல்லமை அதைச் செய்யும். நீங்கள் பேசி, ஒரு உலகத்தை சிருஷ்டித்து, அதில் சென்று வாழ முடியும். அல்லேலுயா! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 151 அந்த வல்லமைதான் இப்பொழுது சபையில் உள்ளது, ஆனால் அது ஒரு விதியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதி “ஒரு சில கட்டளைகளைக் கைக்கொள்ளுதல்” என்பதல்ல. அது ஒரு விசுவாசத்தின் பிரமாணம். இயேசு, “விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்” என்றார். நீங்கள் அதை விசுவாசிக்க முடிந்தால், உங்கள் ஆத்துமா எதையெல்லாம் விசுவாசிக்கும்படி தேவன் உங்களை வழி நடத்துகிறாரோ, அது உங்களுடையது. விசுவாசத்தினால், உங்களுடைய காலடியை நீங்கள் வைக்கக் கூடிய ஒவ்வொரு இடத்தையும், தேவன் உங்களுக்குத் தருகிறார். ஆமென்! அது உங்களுடையது, நீங்கள் அதை சுதந்தரிக்கிறீர்கள், நீங்கள் மாத்திரம் உங்களுக்கு அதைத் திறக்கிற விசுவாசப் பிரமாணத்தின் திறவுகோலைக் கண்டுபிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? அந்த வல்லமை…கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள் தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருப்பீர்களேயானால், அது உங்களை விட்டு ஒருபோதும் நீங்காது. அது எல்லா நேரத்திலுமே உங்களுடன் கூட உள்ளது. ஆனால், உங்களுடைய விசுவாசம் அதை விட்டு அகன்று சென்றாலும், அது அப்பொழுதும் அங்கேயே இருக்கிறது. அல்லேலுயா! 152 நீங்கள் இரட்சிக்கப்படும்போது, உங்களை பூமியின் அசுத்தத்தினின்று உயர்த்திக்கொள்ள தேவன் உங்களுக்கு விசுவாசத்தை அளிக்கின்றார். உங்களுடைய விசுவாசம் உலகத்தின் காரியங்களை ஜெயங்கொள்கிறது. உங்களுடைய விசுவாசம் என்னவாயுள்ளது? உங்களை ஒரு தேவனுடைய குமாரனாகச் செய்ய, தேவன் உங்களுக்குள் செய்துள்ள அந்த செய்கையில் உள்ள உங்களுடைய விசுவாசம். நீங்கள் உங்களுடைய பொய் சொல்லுதலை விட்டுவிட்டீர்கள், நீங்கள் உங்களுடைய திருடுதலை விட்டுவிட்டீர்கள், நீங்கள் உங்களுடைய மது அருந்துதலை விட்டுவிட்டீர்கள், ஏனெனில் உங்களுடைய விசுவாசம் அதற்கு மேலாக உங்களை உயர்த்துகிறது. ஆமென். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், உங்களிடத்தில் விசுவாசமில்லை. “கிருபையினாலே, விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்.” 153 உங்கள் விசுவாசத்தை நீங்கள் எவ்வளவாக வெளியிடுகின்றீர்களோ, அவ்வளவாக உங்களுக்கு வல்லமை இருக்க முடியும், ஏனெனில் உங்களுக்குள் வானங்கள் மற்றும் பூமியை உருவாக்கும் வல்லமை உங்களுக்குள் வாசம் செய்கிறது. தேவன் உங்களுக்குள் வாசமாயிருக்கிறார், நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றீர்கள். ஆமென்! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஆனால், அது உங்களுடைய விசுவாசமாயுள்ளது. இயேசு, “உன் விசுவாசத்தின்படியே, உனக்கு ஆகக்கடவது. நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும். மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி, சந்தேகப்படாமல், நீங்கள் கூறியுள்ளதை விசுவாசித்தால், அது அப்படியே ஆகும்” என்றார். 154 அப்படியானால் நமக்குள் ஜீவிக்கிற இந்த மகத்தான கிறிஸ்துவின் மீட்பில், சபையை விட்டுப்போகாத இந்த அடிக்கப்பட்ட கன்மலையின்மேல் விசுவாசங்கொண்டிருக்கிற நாம், எந்த விதமான ஜனங்களாயிருக்க வேண்டும்? “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்,” கல்வாரியிலிருந்து சபைக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்த இந்த மகத்தான என்றென்றுமான-பிரசன்னமான இரட்சிப்பும் வல்லமையும், ஜீவனுள்ள தேவனின் என்றென்றுமான-பிரசன்னமும், இந்த மகத்தான பாய்ந்தோடுதலும், அடிக்கப்பட்ட கன்மலையும் நம்முடனே செல்கிறது. 155 இஸ்ரவேல் தன்னுடைய விசுவாசத்தை இழந்துவிட்டாள். அவர்கள் பாதை தவறினர். அவர்கள் மாமிசப்பிரகாரமானவைகளுக்காக இச்சிக்கத் தொடங்கினர். அவர்கள் விசுவாசத்தோடு தரித்திருந்திருந்தால், தேவன் அந்த தேசத்துக்கு அவர்களைக் கொண்டு செல்லப்போகிறார் என்று விசுவாசித்திருந்தால், அவர்களை ஒன்றும் தடை செய்திருக்காது. அவர்கள் ஏற்கனவே சமுத்திரத்தைப் பிளந்து, அவர்கள் தங்களுடைய சத்துருக்களின் மேல் வாதைகளை வரவழைத்து, அவர்கள் தங்கள் சத்துருக்களை முன்னோக்கி செல்ல விடாமல் நிர்மூலமாக்கி, அந்த தேசத்தை நோக்கி நடந்தனர், இருப்பினும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க அவர்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று. 156 யோசுவாவும் காலேபும் அந்த விசுவாசத்தைப் பெற்றிருந்தனரே! அவர்கள், “எங்களுக்கு எதிராய் வரும் எந்தக் காரியத்தையும் நாங்கள் ஜெயங்கொள்ளக் கூடியவர்களாயிருக்கிறோம்” என்றனர். 157 அதுவே சபையோடுள்ள தொல்லையாயுள்ளது. நாம் ஒவ்வொரு வியாதியையும் ஜெயங்கொள்ள முடியும். நாம் நமக்குள்ளே வல்லமையை பெற்றுள்ளோம். நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், நமக்கு முன்னால் ஒன்றுமே நிற்கமுடியாது. ஒரே காரியம், அதை விசுவாசிக்கும் யாரையாவது, தேவன் உங்களுக்காக ஏற்கனவே செய்து முடித்துள்ளதை விசுவாசிக்கும் யாரையாவது அவர் கண்டு பிடிக்க விரும்புகிறார். நாம் இருப்போம் என்றல்ல; நாம் இப்பொழுதே அவ்வாறிருக்கிறோம்! என்றென்றும்-ஜீவிக்கும் ஆவியின் பிரசன்னம் நம்முடன் இருக்கிறது. ஆமென்! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 158 இன்று காலை நான், கன்மலையிலிருந்து வருகிற என்றென்றும்-பிரசன்னமாயுள்ள தண்ணீர் என்னும் பொருளின் பேரில் பேசினபோதும் அதைத்தான் நான் பொருட்படுத்துகிறேன், கன்மலையிலிருந்து வருகிற என்றென்றும்-பிரசன்னமாயுள்ள தண்ணீர் இப்பொழுது இங்குள்ளது. கல்வாரியில் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த என்றென்றும்-பிரசன்னமான அந்த தண்ணீர். கல்வாரியில் அவரை விட்டு வெளிவந்த பரிசுத்த ஆவி, பெத்தெ கொஸ்தே நாளன்று சபையின் மேல் வந்தார், அதே பரிசுத்த ஆவி இன்று காலை இங்கு பிரசன்னமாயுள்ளார். அது நமக்கு ஒரு வாக்குத்தத்தமாக உள்ளதே! 159 அதன் காரணமாகத்தான், எனக்கு அவர் அங்கே கட்டளையிட்டபோது, வியாதியஸ்தர் முன்னால் நடக்கும்போது, நான் அதை விசுவாசிக்கிறேன்; தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே! அப்படித்தான் தரிசனங்களும் சம்பவிக்கின்றன; தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளாரே! தேவனால் பொய் சொல்ல முடியாது. 160 அதை விசுவாசியுங்கள்! நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். கதவைத் திறந்து, அதைத் திறந்து உங்களை உள்ளே அனுமதிக்க, அங்கு ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இன்றைய நமது தேவை அதிக வல்லமைக்காக ஜெபிப்பது அல்ல. ஒரு புது பூமியைப் படைக்க உங்களிடம் போதிய வல்லமை உள்ளது. உங்களுக்கு தேவை என்னவென்றால் அந்த வல்லமையை உபயோகிக்க விசுவாசமே. நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டுக்குள் கொண்டு வந்து, அப்படிப்பட்ட தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, நீங்கள் தேவனைக் கேட்டுக் கொள்வதெதுவோ, உங்களுக்குத் தெரியுமே! அதைக் குறித்து, நாம் தேவனில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். நாம் அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டால், நாம் அறிவோம். அவர் நமக்கு நன்மையை வழங்காதிரார், நாம் அவருடன் நடந்தால். அவர் நம்முடன் நடப்பார். ஓ, என்னே! 161 அவர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது, அதுதான் பாதையில் நேராகச் செல்லுதல். இங்கு அலைய வேண்டியதில்லை, அங்கு அலைய வேண்டியதில்லை; ஆனால் பாதையில் தனித்திருக்க வேண்டுமே! சபையும் ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயுள்ளது, அது அந்த பாதையில் தரித்திருத்தலே! அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் அந்த அக்கினி ஸ்தம்பத்தை பின்பற்றுவதன் மூலம் தங்களை பாதையில், நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிருந்து. அதுதான் அவர்களை வழி நடத்தினது. அவர்கள் காணக் கூடிய, அக்கினி ஸ்தம்பமாய் அது இருந்தது. அது மோசேயின் மூலம் கிரியை செய்ததை அவர்கள் கண்டு, அவன்தான் அவர்கள் தலைவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 162 இன்றைக்கு நாம் வார்த்தையைப் பெற்றுள்ளோம். நாம் வார்த்தையைப் பின்பற்றுகிறோம். விசுவாசிகளில் வார்த்தை கிரியை செய்வதை நாம் காண்கிறேம், ஆகையால், அது அப்படியிருக்குமென்று நாம் அறிவோம். தேவன் நம்மோடு கிரியை செய்து, அடையாளங்கள் பின்தொடர்வதனால் வார்த்தையை உறுதிப்படுத்துகிறாரே! நாம் வார்த்தையோடு தரித்திருக்கிறோம். வார்த்தை பலனையளிக்கிறது. 163 அவர்கள் மோசேயுடன் தரித்திருந்தனர். ஏனெனில், அக்கினி ஸ்தம்பத்தை, மோசே அதைப் பின்தொடர்ந்தான். அவர்கள் மோசேயைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் தேவனுக்கு எதிராகத் துவங்கி, தேவனுக்கு எதிராகவும் மோசேக்கும் விரோதமாகவும் வம்பு செய்யத் துவங்கினபோது, அவர்கள் இந்த பக்கமும் அந்த பக்கமும் அலைந்தனர். அப்பொழுது அவர்களுக்கு தொல்லைகள் உண்டானது. நிச்சயமாக. 164 நாம் வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும், வார்த்தை அடையாளங்களைத் தோற்றுவிக்கிறது. இயேசு, “வார்த்தையை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்றார். பாருங்கள், அது தரித்திருப்பதோடு…நீங்கள் வார்த்தையோடு தரித்திருக்கும்போது, வார்த்தை அடையாளங்களை தோற்றுவிக்கிறது. ஆனால், மோசே என்ன செய்தான்? 165 அவர்கள் அலைந்து திரித்தனர், அவர்கள் என்ன செய்தனர்? பாதை தவறி, அவர்கள் தங்களுடைய தண்ணீர் வரவை இழந்துபோயினர். 166 அதைதான் சபையும் இன்று செய்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அது வேதத்தின் பாதையை விட்டு விலகி அலைகிறது. அவர்கள் தத்துவங்களுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் செய்யக் கூடாத சிறிய காரியங்களில் பிரவேசித்துவிட்டனர். அவர்கள் மற்ற காரியங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அப்போஸ்தலருடைய சபைப் பிரமாணம் போன்ற காரியங்களை ஏற்றுக் கொண்டனர். அதை நீங்கள் வேதாகமத்தில் எங்கே கண்டறிகிறீர்கள்? அவர்கள் படித்த வேத சாஸ்திர போதகத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனுபவத்திற்குப் பதிலாக ஸ்தாபனங்களை ஏற்றுக் கொண்டனர். மறுபடியும் பிறந்த ஒரு அனுபவத்திற்கும் பதிலாக அவர்கள் கரங்களை குலுக்குதலை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தண்ணீர் ஞானஸ்நானத்திற்குப் பதிலாக தெளித்தலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்தாவி,” என்ற அத்தகைய ஒரு காரியமே வேதத்தில் இல்லாதிருக்கும்போது, அந்த பொல்லாங்கான முறைமையை ஏற்றுக்கொண்டனர். வேதம், “இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்” என்று கூறியுள்ளதே! அதே தண்ணீரை நீங்கள் மறுபடியும் பெறவேண்டுமானால், செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு, அது பாதைக்குத் திரும்ப வருவதேயாகும். திரும்பி வருதலே…அவர் விட்டுவிட்டுச் சென்று விடவில்லை; அவர் இன்னமும் இங்கே இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பதிலாக பிரமாணங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் கோபத்தில் அலைந்து திரிகின்றீர்கள். 167 ஒருவர், “பாருங்கள், நான் ஒரு மெதோடிஸ்டு” என்றார். வேறொருவர், “நான் ஒரு பாப்டிஸ்டு” என்கிறார். அப்படியானால், நீ ஒரு கிறிஸ்தவன் அல்ல என்பதை அது காண்பிக்கிறது. நாம் கிறிஸ்துவினுடையவர்களாயிற்றே! நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். நீங்கள், “பாருங்கள், நான் ஒரு பாப்டிஸ்டானால் நலமாயிருக்குமா?” என்று கூறுகிறீர்கள். நீ அவ்வாறானால், அப்படியானால் நீ கிறிஸ்துவின் எந்த பாகமுமில்லை, நீ ஒரு பாப்டிஸ்ட். நீங்கள், “பாருங்கள், நான் பெந்தெகொஸ்தேயினன்” என்று கூறுகிறீர்கள். நீ ஸ்தாபனத்தின் மூலம் பெந்தெகொஸ்தேவானால், நீ அதுவாகத்தான் இருக்கிறாய். 168 ஆனால், நீ பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றிருப்பாயானால்! பெந்தெகொஸ்தே வார்த்தை ஒரு பெந்தெகொஸ்தே அனுபவத்தைக் கொண்டு வருமே! அந்த சீஷர்கள் செய்த அதே காரியத்தை பின்பற்றுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரையில் அங்கேயே தரித்திருங்கள். 169 ஆகையால் நீங்கள் வார்த்தைக்கு முரணாயிருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆவி வார்த்தை கூறுவதற்கு முரணாகச் சென்றால், அப்பொழுது அது பரிசுத்த ஆவியே அல்ல. அது பிசாசு பரிசுத்த ஆவியைப் பாவனை செய்துகொண்டிருத்தலாகும். நாம் அதன் பேரில் எந்நிலையை அடைந்துள்ளோம் என்று நீங்கள் பார்த்தீர்களா? ஓ, நம்மில் சிலர் அந்நிய பாஷைகளில் பேசினோம், நாம் சத்தமிட்டு மயங்குதல் போன்ற காரியங்களை உடையவர்களாயிருந்து, இந்த மற்ற எல்லா காரியங்களையும் மறுதலித்துவிட்டோம். வேதத்தில் இல்லாத ஒவ்வொரு காரியத்தையும் சபைக்குள் நுழைய நாம் அனுமதித்தோம். இன்று நாம் எந்நிலையை அடைந்திருக்கிறோம்? நாம் வேறொரு வனாந்திரத்திற்கு, உலர்ந்த ஸ்தாபனத்திற்கு திரும்ப வந்துள்ளோம். நாம் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, நமது தண்ணீரை இழந்து விட்டோம். பெந்தெகொஸ்தேயினர் அதைத்தான் செய்தனர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தபோது, அது ஐக்கியத்தை முறித்துப்போட்டு, “பாருங்கள், இந்த மனிதன் அதை விசுவாசித்தால், இப்பொழுது அவருடன் நாங்கள் சேரமாட்டோம்” என்கின்றனர். 170 முன்னோக்கிச் சென்று, சத்திய வார்த்தைக்கு, சத்தியத்தை அறிகிற அறிவுக்கு அவர் வரும் வரைக்கும், அவருடன் தங்கியிருங்கள். அது எதுவாக இருந்தாலும், எப்படியும், அது போகட்டும். அப்படியே செல்லுங்கள், சகோதரராயிருங்கள். 171 ஆனால், ஓ, நாமோ ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, “பாருங்கள், நீ ஒருத்துவக்காரன் அல்ல, நீ இருத்துவக்காரன், அல்லது திரித்துவக்காரன், அல்லது இந்த விதமாக இல்லாதிருக்கிறபடியால், உன்னுடன் நாங்கள் ஐக்கியம் கொள்ளமாட்டோம்” என்கிறோம். அப்படியானால் நாம் அதைச் செய்யும்போது, நாம் என்ன செய்கிறோம்? நாம் நம்மை மீண்டும் ஒரு வனாந்தரத்திற்கு கொண்டு வருகிறோம். அது உண்மையே! 172 ஆனால், நினைவிருக்கட்டும், இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லும், பாதையை விட்டு விலகிச் சென்றபோது, அந்தக் கன்மலை ஒருபோதும் அவர்களை விட்டுப் போய்விடவில்லை; அது அங்கேயே தரித்திருந்தது, தண்ணீரும் அங்கேயே இருந்தது. அது போன்று பரிசுத்த ஆவியும், அங்கேயே தங்கியிருக்கிறார். நாம் அலைய வேண்டியதில்லை. 173 இப்பொழுது, தேவன் ஒரு பெரிய பாடத்தை இங்கு நமக்கும் கற்றுத் தருகிறார். தேவன் ஒரு பாடத்தை இங்கு நமக்கும் கற்றுத் தருகிறார். எல்லாருக்காகவும், ஒரே தரம், கிறிஸ்து ஒரு முறை அடிக்கப்பட்டு, ஒரு பெந்தெகொஸ்தே அனுபவத்தைத் நமக்குத் தந்திருக்கிறார். இப்பொழுது, கன்மலை அடிக்கப்பட்டபோது, அது மீண்டும் அடிக்கப்பட வேண்டியதில்லை. அது ஒருமுறை மாத்திரமே அடிக்கப்பட்டது. 174 அதை இரண்டாந்தரம் அடித்ததனால் மோசே ஒரு தவறை செய்து, அதன் மூலம், பாவநிவர்த்தியில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தின் பலவீனத்தைக் காட்டினான். ஆனால் கிறிஸ்து ஒரு தரம் அடிக்கப்பட்டபோது, அவர் மறுபடியும் அடிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்பதை நாம் அறிவோம். பாருங்கள், மோசே என்ன செய்துகொண்டிருந்தான்? மோசே ஏதோ ஒன்றை புதிதாக ஏற்படுத்திக்கொண்டு, ஒரு புதிய காரியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். 175 இன்றைய நம்முடைய குருவானவர்களும் அதைதான் செய்துள்ளனர். அவர்கள் ஏதோ ஒன்றை புதிதாக உருவாக்க முயற்சித்துள்ளனர். “நாம் நம்மை அசெம்பிளிஸ் ஆப் காட் சபையாக உண்டாக்கிக் கொள்வோம். நாம் நம்மை தேவனுடைய பெந்தேகோஸ்தே சபையாக உண்டாக்கிக் கொள்வோம். நாம் நம்மை பொது ஆலோசனை கூட்டமாக உண்டாக்கிக் கொள்வோம். நாம் நம்மை இதை, அதை அல்லது மற்றதை உண்டாக்கிக் கொள்வோம்.” தேவன் செய்தது அதுவல்ல. அது அவருடைய யோசனையல்ல. 176 கிறிஸ்து ஒரே தரம் அடிக்கப்பட்டார். அதுதான் அசலான அனுபவம். அதுதான் மூல வழி. பெந்தெகொஸ்தே நாளன்று, பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான். 177 “நாமோ, ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் தெளித்து, எல்லாவிதமான பிரமாணங்களையும் மற்றும் அதைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அளிக்கிறோம்.” நாம் வார்த்தையை விட்டு விலகிச் செல்லும்போது, நாம் எங்கேயும் செல்ல முடியாததில் வியப்பொன்றுமில்லை. புரிகிறதா? 178 தேவன் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார். மோசே, “இப்பொழுது நாம் புதிதாக ஒன்றை இங்கே இப்பொழுது ஆரம்பித்து, நாம் ஸ்தாபனம் உண்டாக்கி, மேலும் நாம் கத்தோலிக்க சபையைத் தொடங்குவோம்” என்று அவன் கூற வேண்டியவன் அல்ல. அதைத்தான் அவர்கள் முதலில் செய்தனர். இல்லை, அதன்பின்னர் சற்று கழித்து, “பாருங்கள், அதிலிருந்து நாம் புதிதாக ஒன்றைத் தொடங்குவோம், நாம் லூத்தரன் சபையை ஆரம்பிப்போம்” என்றனர். பிறகு ஆங்கிலிகன், பிறகு பாப்டிஸ்டு, மேலும் என்னவெல்லாமோ, காம்ப்பெல்லைட்ஸ், கிறிஸ்துவின் சபை, அந்திக்கிறிஸ்து, மற்றெல்லா காரியங்களுமே. பாருங்கள், அவர்கள் அனைவரும் ஒன்றன் பின் மற்றொன்றாக, ஒன்றன்பின் மற்றொன்றாக, ஸ்தாபனங்களையும், ஸ்தாபன அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டே சென்றனர். அது இதுவாயிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு முறையும் ஒன்றைப் புதிதாகத் தொடங்க, அவர்கள் கன்மலையை மீண்டும் அடித்துக்கொண்டிருக்கின்றனர். நமக்கு ஒரு புதிய உபதேசம் தேவையில்லை. 179 வேதத்தில் ஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். வேதத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒல்வொரு மனிதனும், தேவனுடைய வழியில் வந்து, தேவன் என்ன செய்தாரோ அதையே செய்தான். அவர்கள் அதே காரியத்தைச் செய்தனர். அவர்கள் அதே அனுபவத்தை பெற்றிருந்தனர். அதே அடையாளங்கள் அவர்களைத் பின்தொடர்ந்தன. அதே கிரியைகள் அவர்களைப் பின்தொடர்ந்தன. ஏன்? அவர்கள் கன்மலையினால் உயிர் வாழ்ந்தனர். அதே தண்ணீரை அவர்கள் பருகினர். 180 மேலும், இன்றைக்கு, நம்மிடையே நிறைய சபை பிரமாணங்களும், ஸ்தாபனங்களும் காணப்படும் காரணம் என்னவெனில், நாம் ஏதாவதொன்றை புதிதாகத் தொடங்கிக்கொண்டிருக்கிறோம். நமக்கு புதியது ஏதும் தேவையில்லை. திரும்பிச் செல்லுங்கள்! 181 மோசே மறுபடியும் கன்மலையை அடித்து, புதிதாக ஒன்றைத் தொடங்கியிருக்கக் கூடாது. அந்த மூல கன்மலையைப் பற்றி, அவன் அவர்களிடம் பேசியிருக்க வேணடும். ஓ, நீங்கள் அதைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்! மோசே அந்த மூல, அடிக்கப்பட்ட கன்மலையைக் குறித்து பேசியிருக்க வேண்டும்; அவன் அதை மறுபடியும் அடிக்க முயற்சித்திருக்கக் கூடாது, ஒரு புதிய காரியத்தை துவங்க முயற்சித்திருக்கக் கூடாது, ஆனால் அந்த பழைய காரியத்திடம் பேசியிருக்க வேண்டுமே! 182 தேவனே, எனக்கு உதவி செய்யுமே! நான் தரித்திரனாக பிரசங்க பீடத்தில் மரிக்க நேரிட்டாலும், நான் அந்த மூல கன்மலையைக் குறித்தே பேசுவேன்! நான் அந்த மூல அனுபவத்தைக் குறித்துப் பேசுவேன். அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுத்த மூல வேதவாக்கியங்களைக் குறித்துப் பேசுவேன், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து வின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” கன்மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம் இப்பொழுதும் நம்முடன் உள்ளது. அது அதே காரியத்தைக் கொண்டு வரும். அது தரிசனங்களைக் கொண்டு வரும். அது சுகமளித்தல்களைக் கொண்டு வரும். அது தீர்க்கதரிசனங்களைக் கொண்டு வரும். அது அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் கொண்டு வரும். 183 இஸ்ரவேலர் மீண்டும் வேதத்தின்படி சரிப்படுத்துப் பட்டபோது, திரும்பவும் பாதையில் வந்துபோது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. 184 பெந்தெகொஸ்தேயினரும் சுமார் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளாக, வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருக்கின்றனர். கன்மலையிடம் திரும்பி வாருங்கள்! அது காணும் தூரத்தில் உள்ளது. இதோ அது, இங்கு வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் செய்த அதே காரியத்தை இங்கு அவர் செய்துகொண்டிருக்கிறார், எனவே என்றென்றுமுள்ள தண்ணீர் இங்குள்ளது. அதனிடம் திரும்பி வாருங்கள், முதலில் இருந்த, அந்த மூல காரியத்திற்கு வாருங்கள். அது முதலில் எப்படி இருந்தது? 185 “பாருங்கள், அவர்கள் போதகர்களுடன் கைகுலுக்கினார்களா”? அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லையே. “அவர்கள் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா”? அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லையே. வேதத்தில் எந்த நபர்களுமே, எங்கும், அல்லது (மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்) வேதத்திற்கு புறம்பே, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அது ஒரு கத்தோலிக்க பிரமாணமேயன்றி, ஒரு வேதாகம உபதேசம் அல்ல. புரிகிறதா? 186 அவர்கள் பரிசுத்த ஆவியை உடையவர்களாயிருந்தனர். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடர்ந்தன. அது மீண்டும் இன்றைக்கு அதைச் செய்யும். அடிக்கப்பட்ட அந்த கன்மலை! அந்தக் கன்மலை எப்போதும் இருந்துபோல என்றென்றும் ஜீவிக்கிறது. 187 நாம், “பாருங்கள், இப்பொழுது நீங்கள் நம்முடைய பெந்தெகொஸ்தே சபையில் சேர்ந்து, நம்முடைய பெந்தெகொஸ்தே ஆதிக்கத்திற்குள் வாருங்கள்” என்று கூறாதிருப்போமாக. “நீங்கள் வந்து பாப்டிஸ்டு, அல்லது மெதோடிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியன், அல்லது கத்தோலிக்க சபையைச் சேர்த்து கொள்ளுங்கள்” என்று கூற வேண்டாம். அது என்ன? அது கன்மலையை மீண்டும் அடித்து, புதிதாக ஒன்றைத் துவங்க முயற்சிப்பதாகும். 188 “நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறுங்கள், “மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன.” இப்பொழுது நீங்கள் மீண்டும் பாதைக்கு, மீண்டும் அந்த தண்ணீருக்கு வந்துவிட்டீர்கள். அதே தண்ணீர் அதே புத்துணர்ச்சியையளிக்கும். அது சரீரத்துக்கு அதே கசையடியைக் கொடுக்கும். அது அதே சுத்திகரிக்கும் வல்லமையை அளிக்கும். அது அதே சுகமளிக்கும் வல்லமையையளிக்கும். நாம் மாத்திரம் அதே ஆவிக்குத் திரும்பினால், அது அப்பொழுது செய்த அதே காரியத்தைச் செய்யும். 189 திராட்சை செடியிலுள்ள ஜீவன் திராட்சை பழங்களைத் தரும். அது சென்ற ஆண்டு அதைத் தந்திருந்தால், அது இந்த வருடமும் அதையே தரும். அது தேவனுடைய ஒரு பிரமாணமாகும். இது ஒரு திராட்சை செடியாயிருக்குமானால், அதை விட்டு விடுங்கள், அது திராட்சை பழங்களைத் தரும் என்பதே தேவனுடைய விதியாயுள்ளது. நீங்கள் வேறு செடியை அதில் ஓட்டு போடலாம், ஆனால் அதை நீங்கள் சும்மா விட்டு விட்டால், அது மீண்டும் அதே திராட்சை பழங்களையே மீண்டும் உற்பத்தி செய்யும். 190 நாம் சபையுடன் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் தத்துவத்தையும், பாப்டிஸ்டு தத்துவத்தையும், மெதோடிஸ்டு தத்துவத்தையும், பிரஸ்பிடேரியன் தத்துவத்தையும், ஆங்கிலிகன் தத்துவத்தையும், மற்ற ஒவ்வொரு விதமான தத்துவத்தையும் ஓட்டுபோட்டுள்ளோம். நீங்கள் ஏன் அதை தனியே விட்டுவிடக்கூடாது? திராட்சை செடிக்கு மீண்டும் வாருங்கள், அது மீண்டும் அதே வல்லமையை அளிக்கும். ஆமென்! ஆமென்! அது எனக்குப் பிரியம். 191 “புதிதாக ஒன்றைத் துவக்குவோம்.” அதைத்தான் நாம் செய்திருக்கிறோம். நம்முடைய அதிகாரத்தை காண்பிக்க முயற்சிக்காதீர்கள். “வேதபண்டிதர் இன்னார்-மற்றும்-இன்னார் இன்ன-மற்றும்-இன்ன-மற்றும்-இன்ன பெரிய சபையின் ஸ்தாபகர்.” அதுவல்ல இது. 192 மோசே அதைதான் செய்தான், “என்னால் என்ன செய்ய முடியும் என்று நான் அவர்களுக்கு காண்பிப்பேன். எப்படியாவது, தண்ணீரை நான் கொண்டு வருவேன்!” அவன் அதை அடித்தான், அதில் தண்ணீர் வரவில்லை. அவன் மீண்டும், “என்னால் என்ன செய்ய முடியுமென்று காண்பிக்கிறேன்” என்று கூச்சலிட்டான்! அதற்காக தேவன் அவனிடத்தில் நடவடிக்கையை மேற்கொண்டார். 193 நீங்களும், “ஏதாவதொரு ஸ்தாபனத்தைப் பற்றிக்கொண்டால்” என்று நீங்கள் நினைக்காதீர்கள். தேவன் அதற்காக உங்களிடத்திலும் நடவடிக்கையை மேற்கொள்வார். அது முற்றிலும் உண்மை. நீங்கள் அந்த அசலானதற்கு திரும்பி வரவேண்டும். திரும்பி வாருங்கள். 194 நீங்கள் ஜனங்களிடம் பேசுங்கள். (“நீங்கள் எங்கள் சபையைச் சேர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் வந்து எங்கள் பிரமாணத்தைக் கூறுங்கள்” என்று அவர்களிடம் கூறாதீர்கள்.) “நீங்கள் திரும்பி வந்து மனந்திரும்பி, உங்கள் பாவமன்னிப்புக்கென்று, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்; உங்கள் இருதயம் சரியாயிருந்தால், அப்பொழுது நீங்கள் பரிகத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். ஒரு கூட்ட விசுவாசிகளுடன், அவர்களுடன் இந்த அடையாளங்கள் செல்லும்.” காரணம் ஏன்? அந்தக் கன்மலை, அடிக்கப்பட்ட கன்மலையும் அவருடைய ஜீவத்தண்ணீரும் புறப்பட்டு வந்து, அவர் முன் காலத்தில் செய்த அதே காரியத்தையே இப்பொழுதும் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது. அது அப்படி செய்யாமல் இருக்க முடியாது. ஓ, ஆம். 195 நாம் விளம்பரப்படுத்திக் கொண்டு, “நாம் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு” என்று கூற விரும்புகிறோம். 196 கன்மலையினிடத்தில் பேசுங்கள், அவர் என்றென்றும் பிரசன்னராயிருக்கிறார். அதில் சேர்ந்து கொள்ள முயலாதீர்கள். எனக்கு இங்கே “இணைப்பு” இருக்க வேண்டும். அதில் சேர முயல வேண்டாம். அதில் நீங்கள் சேர்ந்து கொள்ள முடியாது, அந்த ஒரு காரியம் நிச்சயம். நீங்கள் மெத்தோடிஸ்ட்டில் சேரலாம், நீங்கள் பாப்டிஸ்ட்டில் சேரலாம், நீங்கள் பெந்தேகொஸ்தேவில் சேரலாம், நீங்கள் ஆங்கிலிகனில் சேரலாம், ஆனால் நீங்கள் இதில் சேர முடியாது. இல்லை. நீங்கள் இதனோடு நிரப்பப்பட வேண்டும். அதில் சேர வேண்டாம்; அதனால் நிரப்பப்படுங்கள். அவ்வளவு தான். அது எதனால் நிரப்பப்பட்டுள்ளது? வல்லமையினால் நிரப்பப்பட்டு, ஆவியினால் நிரப்பப்பட்டு, ஜீவனால் நிரப்பப்பட்டு, சந்தோஷத்தால் நிரப்பப்பட்டு, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், உங்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டுள்ளபடியால், என்றென்றுமுள்ள பிரசன்னம் அங்குள்ளது. ஞாபகம் கொள்ளுங்கள். நேரமாகிக்கொண்டிருக்கிறபடியால், நான் முடிக்க வேண்டும். 197 ஆனால், நினைவிருக்கட்டும், கன்மலை அவர்களை விட்டு விலகவேயில்லை. அது அவர்களை விட்டு விலகவேயில்லை. கிறிஸ்துவும் நம்மை விட்டு விலகவேமாட்டார்; கிறிஸ்து, “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார். அது சரியா? ஒரேபிலிருந்து நேபோ வரைக்கும் அந்த கன்மலை அவர்களுடன் தங்கியிருந்தது. அது தங்கியிருந்தது. யோர்தானுக்கு கீழே, அது இன்னும் அங்கிருந்தது. ஓ தேவனே, யோர்தானில் அதை நான் காண விரும்புகிறேன்! 198 மோசே, அவன் யோர்தானிலிருத்தபோது, கன்மலை வழி முழுவதும் அவனோடிருந்தது. அவன் அதன் மேல் அங்கே நின்று கொண்டு, தேவனை விட்டுப் பின் வாங்கி தூரம் சென்ற ஒரு—ஒரு கூட்ட ஜனங்களை நோக்கினான். அவனுடைய இருதயம் அவர்களுக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. அவன் யோர்தானை நோக்கினான். அவன் யோர்தானில் இருந்தான். யோர்தான், ஆவிக்குரியபிரகாரமாக, நான் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். மேலும் அவன் அங்கு நின்று கொண்டிருந்தான், மரணம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் நோக்கிப் பாரத்தான், அவனுடைய பக்கத்திலே இருந்தது, அங்கே அந்த கன்மலை இருந்தது. அவன் அந்த கன்மலையின் மேல் ஏறி நின்றான், தேவதாதர்கள் வந்து, அவனைக் கொண்டு சென்றனர். 199 “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” காலம் எவ்வளவு தான் கடினமாக இருந்தாலும், நமக்கு எவ்வளவுதான் வயதானாலும், எந்தவிதமான ஒரு மரணத்தில் நாம் மரித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அங்கே யோர்தானில் அந்த கன்மலை இருக்கும் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள். கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த அந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள-பிரசன்னம் நம் வாழ்நாள் முழுவதும், யோர்தானிலும் கூட நம்முடன் இருக்கும். 200 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. [சபையிலுள்ள ஒரு சகோதரன் தீர்க்கதரிசனமாக ஒரு செய்தியை அளிக்கிறார்—ஆசி.] 201 அந்த ஆவியானது நமக்கு மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கையில், தேவனுடைய ஆவி நமக்கு மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கையில், இந்தக் காலை இங்கே கிறிஸ்துவை அறியாதவர்கள், நீங்கள்—நீங்கள் அந்த கன்மலைக்கு அருகில் இல்லாமல், அதனிடத்தில் இந்த காலை இதுவரை பேசாதவர் யாராகிலும் இருக்கிறார்களா? ஆனால் அது உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அது எங்கும் கிரியை செய்வதை நோக்கிப் பாருங்கள், அவர் சுற்றிலும் அசைவாடுவதைப் பாருங்கள், அது ஜனங்களின் மேல் அசைவாடுவதைப் பாருங்கள். அதுதான் தண்ணீரின் என்றென்றும்-பிரசன்னம். அது இரடசிப்பு. அவர்கள் இனி அமைதியாயிருக்க முடியாத அளவிற்கு அவர்களுடைய பாத்திரங்கள் வழிந்தோடும் ஒரு நிலைக்கு கொண்டு செல்வது அந்த ஆவிதான், ஏதோ ஒன்று வெளி வர வேண்டும். நீங்கள் அவரை அறியாமலிருந்தால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள். இப்பொழுதே நான் அவரை அறிய விரும்புகிறேன். அவருடன் நான் பேச விரும்புகிறேன், அவருடை ஆவியின் பரிபூரணத்தில் நான் அவரை அறிய விரும்புகிறேன். எல்லா நேரத்திலும், அவர் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் அப்படி இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் பேசும் நிலையில் இருக்க வேண்டும். நான் தாகமாயிருக்கிறேன், நான் தேவனுக்காக பசியாயிருக்கிறேன். அவரை நான் அதிகமாக அறிய விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? 202 ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, சகோதரனே. உங்களை, ஆம், பின்னால் உள்ள உங்களையும். இங்கே கீழே உள்ள, பெண்மணியே, ஆம். பெண்மணியே. உங்கள் கரங்களை நாங்கள் காண்கிறோம், தேவனும் அவைகளைக் காண்கிறார். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதீப்பாராக. பெண்மணியே, உன்னையும். ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. சகோதரியே, உன்னை ஆசிர்வதிப்பாராக. அமைதியாயுள்ள இந்நேரத்தில், வேறு யாராகிலும் இப்பொழுது உண்டா. அங்கே பின்னால் உள்ள வாலிப நபரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 203 அதைக் குறித்து சிந்தியுங்கள். அதைக் குறித்து சிந்தியுங்கள், கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள-பிரசன்னம், அந்த அதே ஆவி; நம்முடைய நியாயத்தீர்பை அவர் ஏற்றுக்கொண்டபோது, அவர் நியாயந்தீர்க்கப்பட்ட அந்த நாளிலே அங்கே கூக்குரலிட்டார். தேவனுடைய கோபக்கினையின் கோல் அவரை அடித்தது, உங்கள் பாவங்கள் அந்த கோலில் சுற்றப்பட்டிருந்தன, அவரை அடித்தபோது, அவருடைய இரத்தமும், தண்ணீரும் அவரிடத்திலிருந்து பெருக்கெடுத்து வந்தது. அவர், “பிதாவே, உமமுடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார். பெந்தெகொஸ்தே நாளன்று, நம்முடைய பிரயாணத்தில் நம்முடன் கூட செல்ல அது வந்தது. அது இப்பொழுது மிக அருகாமையில் உள்ளது. 204 நீங்கள் பிரயாணத்தை துவங்கி, வீட்டைவிட்டு வெகுதூரம் அலைந்து திரிந்திருக்கும்போது; “கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன்” என்று சொல்லுங்கள். நாம் இதைப் பாடும்போது, நீங்கள் பீடத்தண்டை நடந்து வந்து, உங்கள் ஆத்துமாவைக் கூட, கிறிஸ்துவுக்கென்று, ஒரு பிரதிஷ்டை செய்து கொள்ள விரும்புகின்றீர்களா? ஆமென். நான் தேவனிடமிருந்து வெகு காரம் அலைந்து திரிந்துள்ளேன், (பாதையை விட்டு விலகினேன்) இப்பொழுது நான் வீட்டுக்கு வந்துகொண்டிருகிறேன்; அவிசுவாசத்தின் பாதையில் (அது ஒரு பாவம்) நீண்டகாலம் நடந்து வந்துள்ளேன், கர்த்தாவே, நான் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன், இனி ஒருபோதும் அலையாமல் இருக்க; உமது அன்பின் கரங்களை விரிவாகத் திறவும், இப்பொழுது, கர்த்தாவே, நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். 205 [சகோதரன் பிரான்ஹாம் தொடர்ந்து, கர்த்தாவே, நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன் என்னும் பாடலை மௌனமாக பாடுகிறார்—ஆசி.] 206 மூன்று சிறு பையன்கள், வேகமாக நடந்து வந்து, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு, இப்பொழுது பீடத்தினருகில் முழங்கால் படியிட்டுள்ளனர். நிச்சயமாகவே, அவர்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் சிறு சிந்தையில் தீர்மானம் செய்து, தங்களுடைய இருக்கையை விட்டு புறப்படும் முன்பே அவர்கள் மன்னிக்கப்பட்டனர். இந்தக் காலையில், அவர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை, ஜனங்களுக்கு தெரியப்படுத்த, அவர்கள் முன்னால் வந்து, இங்கே முழங்கால்படியிட்டனர். 207 சில வயதானவர்கள் இதைப் போன்று செய்ய விரும்பி, இந்த விதமாக முழங்கால்படியிட்டு, “கர்த்தாவே, நான்—நான் பாதையை விட்டு விலகி வெகு தூரம் அலைந்து திரிந்துள்ளேன். எனக்கு அதிக சந்தேகங்கள் இருந்து வந்தன, சில நேரங்களில் நான் அலைந்து பாவத்தில் பிரவேசித்தேன். இப்பொழுது நான்—நான் தாமதமாவதற்கு முன்பு திரும்பி வர விரும்புகிறேன். தேவனே, நான்—நான் வர விரும்புகிறேன். நான் உண்மையாகவே வந்து முழங்கால் படியிட விரும்புகிறேன்” என்று கூறுங்கள். ஆமென். 208 இப்பொழுது, ஆர்த்தர் பீமின் மூன்று சிறு பெண்கள், ஏறக்குறைய ஒரே உயரமுள்ளவர்கள், அவர்கள் இங்கே முன்னால் வந்து, முழங்கால்படியிட்டுள்ளனர். 209 முன்னால் வந்து கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணுக்கு இப்பொழுதுதான் அவளுக்கு ஒரு புதிய குட்டி சகோதரன் வீட்டில் பிறந்திருக்கிறான். அன்றொரு நாள் நான் உட்கார்ந்து கொண்டடிருந்தேன்; திருமதி உட் வந்து என்னிடம் கூறினாள், அதாவது இந்த சகோதரி ஒரு குழந்தையை பிறப்பிப்பதற்காக மருத்துவமனைக்குப் போவதாக கூறினாள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “அது ஒரு பையனாயிருக்கும் என்று போய் அவர்களிடம் சொல்” என்று கூறினார். அது பிறந்தபோது, அது ஒரு சிறு பையனாய் இருந்தது. 210 இந்தக் காலை பிள்ளைகளாகத் தென்படுகிறது, சகோதரி ஆர்னால்டின் சிறு வகுப்பிலிருந்து சிறு நபர்கள் வந்து, தங்கள் ஜீவியத்தை பிரதிஷ்டை செய்கின்றனர். என் வலப் பக்கத்தில் பீடம் முழுவதுமே சிறு பிள்ளைகளால் நிறைந்துள்ளது. 211 பீடத்தண்டை, மற்றவர்களுக்கும், பெரியவர்களுக்கும், நாம் ஒரு பாடலைப் பாடினால் அது அருமையாயிருக்கும், (அது அவ்வாறிருக்காதா?). இப்பொழுது, கர்த்தாவே, நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வந்துகொண்டு…?… இனி ஒருபோதும் அலையாமலிருக்கவே; உம்முடைய அன்பின் கரங்களை விரிவாகத் திறவும், இப்பொழுது, கர்த்தாவே, நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். 212 சற்று நேரம் நாம் நம்முடைய தலைகளை வணங்கி, இந்த சிறுவர்களுக்காக, ஜெபம் செய்வோமாக. 213 பரலோகப் பிதாவே, நாளை என்ற ஒன்று வருமானல், இன்னும் மற்றொரு பத்து பதினைந்து ஆண்டுகள் இயேசு வரத் தாமதித்தால், இந்த பையன்களும் பெண்பிள்ளைகளும் வரப்போகும் மற்றொரு தலைமுறையினருக்கு இச்செய்தியை கொண்டு செல்கிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பீடத்தண்டை வந்ததை நினைவு கூருவார்கள் என்பதில், என் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை. கர்த்தாவே, இவர்கள் சிறு இரத்தினங்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய வாலிப மற்றும் மிருதுவான இருதயங்கள் இந்தக் காலையில் குற்றப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் செய்தியை முழுவதும் கூட கேட்கவில்லை; சகோதரி ஆர்னால்ட் பேசியதைக் கேட்ட பின்பு, அவர்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து, இங்கே பீடத்தண்டை வந்து, தங்களுடைய சிறிய ஜீவியங்களை அளிக்கின்றனர். 214 இப்பொழுது, பிதாவே, எங்களுக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியினூடாக நான் பேசியிருக்கிறேன். இந்த பரிசுத்த ஆவியானவர், இந்த ஆவியின் விசுவாசத்தினால், எல்லாக் காரியங்களையும் செய்கிறார். இந்த மணி நேரத்திலேயே, அவர்கள் செய்துள்ள ஒவ்வொரு பாவங்களையும் நீர் மன்னித்துவிட்டீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய இருதயத்திலுள்ள முழு விசுவாசத்தோடு, அவர்களுடைய சிறிய ஜீவியங்களை அவர்களுடைய பாதையினூடாக நீர் காத்துக்கொள்ள வேண்டுமென்று, நான் உம்மிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் வழி விலகிச் செல்லாதிருப்பார்களாக. 215 இது உண்மையாகவே ஒரு வினோதமான காரியமாயுள்ளது. இந்தக் காலை ஆவியானவர், நாம் “வினோதமான ஒன்றை காண்போம்” என்று கூறினார். தேவனே, நீர் மற்றவர்களுடன் ஈடுபடுவதை நிறுத்திவிட்டிருந்தால், இந்த சிறு பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும். எப்படியாய் இந்தக் காலை, பீட அழைப்பில், பெரியவர்கள் ஒருவர் கூட வரவில்லை, ஆனால் சிறு பிள்ளைகளின் முழு கூட்டமும் முன்னால் வந்தன. அதே சமயத்தில், இது பெரியவர்கள் கூட, புரிந்து கொள்வதற்கு கடினமான ஒரு மகத்தான செய்தியாயிருந்தது, ஆனால் பிள்ளைகள் அதன் ஆவியைக் கிரகித்துக் கொண்டனர். பிதாவே, அவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், இவர்களை இக்கூட்டத்தின் விருதுகளாக, உம்மிடம் அளிக்கிறேன்; ஏனெனில், அவர்கள் உயிரோடிருக்கும் வரை, என்றென்றுமுள்ள ஜீவத் தண்ணீரின் பிரசன்னம் அவர்களிடம் பாய்ந்து கொண்டிருக்குமென்று நினைவில் கொள்ளுவார்களாக. அவர்கள் இப்பொழுது நடந்துகொண்டிருப்பவைகளின் பேரில், அதாவது தேவன் அவர்களை இருக்கைகளிலிருந்து இழுத்து, இங்கு அனுப்பினாரென்று அவர்கள் விசவாசம் கொள்வார்களாக, அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அந்த தேவனில் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பார்களாக. அவர்களுடைய மரண நாளில் அவர்களுடைய சிறு ஆவிகள் உம்மிடம் கொண்டு வரப்பட்டு; உயிர்த்தெழுலின் நாளில் அவை மீண்டும் அவர்களுடைய சரீரங்களுக்கு கொண்டு வரப்படுவதாக. பிதாவே, அவர்கள் உம்முடையவர்கள். இயேசுவின் நாமத்தின் மூலம் நாங்கள் அவர்களை உமக்களிக்கிறோம். 216 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். இங்கு வந்து இந்த பீடத்தைச் சுற்றிலும் முழங்காற்படியிடுங்கள் என்று சொன்ன இயேசுவை உங்களுடைய இரட்சகர் என்று விசுவாசிக்கிற, அங்கே கூட்டத்தில் பின்னால் உள்ள, பீடத்தண்டையிலிருக்கிற இந்த சிறு குழந்தைகளை நான் கேட்கப்போகிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்றும், உங்கள் பாவத்தை மன்னிக்கிறவர் என்றும் நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று இங்கே கூட்டத்தாரை நோக்கியவாறு பாருங்கள். இதுவே, அதுவே இயேசு உங்களை இரட்சிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஜனங்களுக்கு கூறக்கூடிய வழியாகும். இப்பொழுது எழுந்து நின்று, சரி, கூட்டத்தாரை நோக்கினவாறு திரும்பிப் பாருங்கள். இயேசுவை நேசிக்கிற சிறு பையன்களும் பெண்பிள்ளைகளுமாகிய நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று, நீங்கள் ஒவ்வொருவரும், அங்கே சபையோரை நோக்கியவாறு திரும்பிப் பாருங்கள். 217 இங்கே முன்னாலுள்ள சிறு பெண்பிள்ளைகளாகிய உங்களைக் குறித்தென்ன? நீங்கள் விகவாசிக்கிறீர்களா? நீங்கள் இயேவை நேசிக்கிறீர்களா? இங்குள்ள சிறு பெண் பிள்ளைகளே, நீங்கள் இயேசுவை உங்களுடைய முழு இருதயத்துடன் நேசிக்கிறீர்களா? நீங்கள் நேசிக்கிறீர்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இனிய இருதயமே, நீ அவரை நேசிக்கிறாயா? இங்கே எழுந்து நில்லுங்கள், நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்கள் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 218 இப்பொழுது நாம் புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்த ஜனங்களுக்காக இந்த விதமாக சுற்றித் திரும்பிப் பாடுவோமாக. “இயேசு என்னை நேசிக்கிறாரே! இதை நானறிவேன். வேதம் அவ்வண்ணமாய் எனக்குக் கூறுகிறது.” பார்த்தீர்களா? நாம் இப்பொழுது இதைப் பாடுகையில் நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. சரி, நாம் இதைப் பாடுவோமாக. இயேசு என்னை நேசிக்கிறாரே! இதை நானறிவேன், ஏனென்றால் வேதம் அவ்வண்ணமாய் எனக்குக் கூறுகிறது; சிறுவர் அவருக்குச் சொந்தமானவர்கள், அவர்கள் பலவீனர்… 219 இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்தியிருப்பதோடு, இங்குள்ள எத்தன் பேர் அங்கிருக்க விரும்புகிறீர்கள்—விரும்புகிறீர்கள்? ஆம், இயேசு என்னை நேசிக்கிறார், ஆம், இயேசு என்னை நேசிக்கிறார், ஆம், இயேசு என்னை நேசிக்கிறார், வேதம் அவ்வண்ணமாய் எனக்குக் கூறுகிறது. 220 இப்பொழுது நீங்கள் எல்லோரும் எனக்குப் பிறகு இதை திரும்பச் சொல்லுங்கள்: [பீடத்தினன்டை இருக்கிற பிள்ளைகள் சகோதரன் பிரான்ஹாம் கூறுவதை திருப்பிக் கூறுகின்றனர்—ஆசி.] இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இன்று அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இந்த நாள் முதற்கொண்டு, நான் அவரை நேசித்து அவரைச் சேவிப்பேன். ஆமென். 221 [சபையிலுள்ள ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாமே, இந்த நேரத்தில் என் இருதயத்தில் நான்கு பிள்ளைகள் உள்ளனர். நீர் தயவுசெய்து அவர்களுக்காக ஜெபிப்பீரா?” என்கிறார்—ஆசி.] நிச்சயமாக ஜெபிப்பேன், சகோதரன் பென். 222 பரலோகப் பிதாவே, மற்ற சிறு பிள்ளைகள் கிறிஸ்துவினிடம் வருவதை இந்த மனிதன் காணும் போது, ஒரு தந்தை என்னும் நிலையில், இவர் தமது சொந்த பிள்ளைகளுக்காக அழுகிறார். இந்த சிறு பிள்ளைகளை பீடத்தண்டை கொண்டு வந்த ஆவியானவர், கர்த்தாவே, அதே ஆவியானவர் அவருடைய பிள்ளைகளையும் இரட்சிப்பாராக. அதை அருளுவீராக. பிதாவே, நாங்கள் அவர்களை உம்மிடம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்படைக்கிறோம். 223 இப்பொழுது சிறுபிள்ளைகளாகிய நீங்கள் இவர்கள் உங்களுடைய இருக்கைகளுக்குத் திரும்பிச் செல்லும்போது, வரிசையிலுள்ள ஒவ்வொரு வரும் இந்த சிறு பிள்ளைகளோடு கரங்குலுக்க, அல்லது அவர்கள் முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் இந்த வழியாக உங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். மேலும் அங்குள்ள அனைவரும் சிறு பிள்ளைகளுடைய முதுகில் தட்டிக் கொடுக்கட்டும். நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உங்களை நேசிக்கிறோம். எங்களைப் போலவே, நீங்களும் அதில் அந்த அளவிற்கு, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராயிருக்கிறீர்கள். நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அழகான, அழகான சீயோனுக்கே; நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கே. வாருங்கள், கர்த்தரை நேசிக்கிற நாம், நம்முடைய சந்தோஷங்களைத் தெரிவிப்போம், இனிமையாக ஒரு மனதுடன் அந்த பாடலில் சேர்ந்து பாடி, இனிமையாக ஒரு மனதுடன் அந்த பாடலில் சேர்ந்து பாடி, இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று, இப்படி…சுற்றி நின்று அது நன்கு வல்லமையாய் பாடுதலாயிற்றே! இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அழகான, அழகான சீயோனுக்கே; நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கே. இப்பொழுது இதை நாம் பாடும் போது நாம் ஒருவரோடொருவர் கரங்குலுக்குவோமாக. நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அழகான, அழகான சீயோனுக்கே; நாம் மேல் நோக்கி சீயோனுக்கே அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கே. 224 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருப்பதோடு நிற்போமாக, நாம்…சகோதரன் டெடி அதை வாசியுங்கள், அப்படியே ஒரு…[சகோதரன் பிரான்ஹாம் நாம் சீயோனுக்கு அணி வகுத்து சென்றுகொண்டிருக்கிறோம் என்னும் பாடலை மௌனமாகப் பாடுகிறார்—ஆசி.] 225 என்னிடம் இங்கே சில விண்ணப்பங்கள் உள்ளன, உறுமால்கள் போன்றவையும் உள்ளன. அவை வெளி நாடுகளிலிருந்து வந்திருக்கக் கூடும். இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தையினிடத்திலிருந்து கிட்டத்தட்ட அந்தளவு நீளமுள்ள ஒரு ஜதை காலுறைகள் வந்துள்ளதை அவர்கள் பெற்றுள்ளதாக பில்லி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான், அந்த குழந்தையின் கால்கள் ஊனமாயுள்ளன. எனவே நாம் அதற்காகவும் கூட ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 226 எனவே …[சபையில், சகோதரன் பென், “சகோதரன் பிரான்ஹாமே, குறுக்கே பேசுவதற்காக தயவுசெய்து என்னை மன்னிக்கவும், சென்ற இரவு எங்கள் காரின் முன்னாலுள்ள முட்டுத்தாங்கியை இடித்தது யார் என்றும், அது வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபியுங்கள், அதற்கு ஜெபியுங்கள். கர்த்தர் அதை வெளிப்படுத்த ஜெபியுங்கள்” என்கிறார்—ஆசி.] ஆமென். சகோதரன் பென், நான் நிச்சயம் அப்படி செய்வேன். 227 [சகோதரன் பிரான்ஹாம் தொடர்ந்து நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம் என்னும் பாடலை மௌனமாக பாடுகிறார்—ஆசி.] 228 கர்த்தாவே, நாங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, அடிக்கப்பட்ட கன்மலை எங்களுக்கருகில் இருக்கிறது என்றும், கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள-பிரசன்னம் சபையுடன் கூட செல்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஓ நித்திய தேவனே, எங்களோடுள்ள இந்த தேவனில் உள்ள விசுவாசத்தை, எங்களுக்கு அவிழ்த்துவிடும். நீர் செய்வீர் என்றும், உம்மிடம் நாங்கள் தயைபெற முடியும்போது, அதனால் உம்மால் எங்களை நம்ப முடியும் என்றும் நான் அறிவேன். கர்த்தாவே, நீர் அதை அபரிமிதமாக எங்களுக்குத் தந்தால், நாங்கள் அதை தவறாக உபயோகிக்கக் கூடும். ஆனால் உம்முடைய கண்களில் எங்களுக்கு தயை கிடைத்தால், அது நடக்கட்டும். 229 யாரோ ஒருவர் அவருடைய காரை மோதிவிட்டதாக நம்முடைய சகோதரன் கூறினார். ஓ தேவனே, இந்தக் காரியங்களைச் செய்ய அந்த மனிதனிடத்தில் பணமில்லை என்பதை நாங்கள் அறிவோம். காரை மோதின அந்த மனிதன் இருதயத்தில் குத்தப்பட்டவராய், அல்லது ஏதோவொரு விதத்தில், இதை செய்வதற்காக மனஸ்தாபப்பட்டு, வந்து, “சகோதரனே, நான்தான் அதை மோதியவன், நான் பழுது பார்த்துத் தருகிறேன்” என்று கூறும்படி, நீர் அந்த நபரைக் கொண்டு வர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சகோதரன் பென்னுக்கும் அவருடைய அன்பார்ந்தவர்களுக்கும் உதவி செய்வீராக. 230 இதோ என் கரங்களில் உறுமால்களும் விண்ணப்பங்களும் உள்ளன, அந்த தேவனில்தான் விசுவாசம் கொண்டுள்ளேன். மோசேக்கு அந்த தேவனில் விசுவாசம் இருந்தது, அவன் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தான். தானியேலுக்கு அந்த தேவனில் விசுவாசம் இருந்தது, அவன் சிங்கங்களின் கெபியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டான். சாதராக், மேஷாக், ஆபேத்நேகோ, அவரில் விசுவாசம் வைத்திருந்துனர், அக்கினியை அவித்தனர். பவுல் அவரில் விசுவாசம் வைத்திருந்தான், ஒரு நாள் ஆராதனைகள் பெருகிக் கொண்டே போய், பவுல் ஒவ்வொருவருக்கும் ஜெபிக்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, அவன் ஒரு உறுமாலை எடுத்து, “தேவன் என்னோடு கூட இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று அவன் கூறினான். அவன் தன்னுடைய கரங்களை உறுமால்களின் மேலும் கச்சைகளின் மேலும் வைக்க, அப்பொழுது அசுத்த ஆவிகள் ஐனங்களை விட்டுப் புறப்பட்டன, வியாதிகளும் நோய்களும் அவர்களை விட்டு விலகின. மேலும், தேவனே, எனக்கும் அதே தேவனில் விசுவாசம் உண்டு. பொல்லாத ஆவிகள் புறப்பட்டு வெளியேறுவதாக. வியாதிகளும், நோய்களும், துன்பங்களும், கர்த்தாவே, அது விலகுவதாக. 231 கீழே நதியில், அக்கினி ஸ்தம்பத்தில் அங்கே கீழே என்னுடன் பேசின அதே தேவனய் நீர் இருக்கிறீர். என்னுடன் கூட நீர் புகைப்படம் எடுத்துக் கொள்ள சம்மதித்து, அது அந்த சுவற்றில், இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் எங்களுடனே இருக்கிறீர். அதே அக்கினி ஸ்தம்பமாய் நீர் என்றென்றும்- பிரசன்னமாயுள்ளீர். நாங்கள் ஆவியில் இணையும் போது, கன்மலையிலிருந்து வந்த தண்ணீரை ஒவ்வொரு நாளும் அனுபவித்திருக்கிறோம். அப்படியானால், நீர் இங்கே இருக்கிறீர். கர்த்தாவே, நாங்கள் உம்மில் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கு உம்மில் விசுவாசம் உண்டு. நீர் எங்களை அபிஷேகித்து உதவி செய்வீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, எங்களுடைய மகிமைக்காக அல்ல; அப்படியானால் நாங்களும் மோசே தவறான காரியத்தை செய்தபோது, இருந்ததைப் போலவே இருப்போம். கர்த்தாவே, உமக்கு உதவி செய்யும்படி நாங்கள் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறோம். அதுவே எங்களுடைய இருதயத்தின் நோக்கமாயுள்ளது, நாங்கள் அதை செய்ய முடிந்தால், உமக்கு உதவி செய்வோம். நாங்கள் எதைச் செய்ய நீர் விரும்புகிறீர் என்பதை, பிதாவே, நீர் எங்களுக்குக் காண்பியும். 232 இப்பொழுது, விசுவாச செய்கையின் பேரில், இந்த உறுமால்களும், இந்த விண்ணப்பங்களும் அடையாளமாகத் திகழும் வியாதிகளை நான் கடிந்து கொள்கிறேன். அவை ஜனங்களை விட்டுப் போய் விடும். கர்த்தாவே, நீர் அதை செய்வீர் என்று நானறிவேன். நீர் அதை செய்வீர் என்று, நான் அதை என் இருதயத்தில், விசுவாசிக்கிறேன். இன்று காலை எங்கள் மத்தியில் உள்ள எல்ல வியாதிகளையும் சுகமாக்கும். 233 தண்ணீருக்காக, கன்மலையிடம் வரவேண்டுமென்று அவர்கள் விரும்புவதாகக் கூறி, தங்களுடைய கைகளை உயர்த்தினவர்களை இரட்சியும். தேவனே, அவர்கள் இன்று அதிக தாகமடைந்து, அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவுக்கான தாகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்படி உப்பால் சாரமேறின அப்படிப்பட்ட ஒரு ஜீவியத்தை உடையவர்களாயிருப்பார்களாக. இதை அருளும். 234 பிதாவே, இன்றிரவு எங்களோடிரும். ஓ தேவனே, இந்த விண்ணப்பங்களின் மூலம், ஜனங்களுடைய இருதயங்களில் என்ன உள்ளன என்பதை நான் கண்டு கொள்ளட்டும். அவர்களுடைய இருதயத்தில் ஒன்றுமில்லாமல் இருந்தால், அப்பொழுது, கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்களுக்கு இன்றிரவு பிரசங்கிக்க நீர் எனக்கு ஏதாவதொன்றை தருவீராக. 235 சகோதரன் நெவில்லையும், அவருடைய மனைவியையும், அவருடைய குடும்பத்தினரையும் ஆசிர்வதியும்; எங்கள் சிறு சபையையும், எங்களுடைய தர்மகர்த்தாக்களையும், எங்களுடைய மூப்பர்களையும், எங்கள் அங்கத்தினர்களையும் ஆசீர்வதியும். பிதாவே, எல்லாவிடங்களிலுமுள்ள உமது சரீரமாகிய, எங்களோடிரும். நாங்கள் இதை உம்முடைய கரங்களில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறோம். சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கே. இப்பொழுது உண்மையாக, இப்பொழுது உண்மையாக, நாம் அவரிடம் அதைப் பாடுவோமாக. புரிகிறதா? வாருங்கள், கர்த்தரை நேசிக்கிற நாம், நம்முடைய சந்தோஷங்களைத் தெரிவிப்போம், இனிமையான பாடலில் ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம், இனிமையான பாடலில் ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம், இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று, இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று. நம்முடைய இருதயங்கள் இப்பொழுது வணங்கியிருப்பதோடு. நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அழகான, அழகான சியோனுக்கே; நாம் அணிவகுத்து சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கே.